பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

உவமைக்கவிஞர் சுரதா


மன்னார் கோயில் - மன்னார்குடி
நூல் : மன்னார்கோயிற் புராணம் (1855)
நூலாசிரியர் : திரிசிரபுரம் மகாவித்வான் கோவிந்த பிள்ளை, கோயில் குடி
சொற்பொழிவு

உபந்யாசம், பிரசங்கம் என்ற சொற்களுக்குப் பதிலாகத் தற்போது தமிழ் மக்களிடையே சொற்பொழிவு எனும் அழகான சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பால்வண்ண முதலியார் என்பவராவார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றி சொற்பொழிவாற்றுப்படை என்ற பெயரில் ஒரு சிறந்த நூல் இயற்றினார். உபந்நியாசம் என்பதற்குப் பதிலாகச் சொற்பொழிவு என்ற புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக அவரை அக்காலத்தில் பலர், 'அதோ சொற்பொழிவு போகிறது' என்று கேலி செய்தனராம்!

இதழ் : (கலைவாணன் (25, 9, 1961), மலர் - 2. இதழ் - 21.


அறுவை - துணி
சவளி - ஆடை

அறுக்கப்படுவதனால் அறுவை என்றும், துணிக்கப்படுவதனால் துணி என்றும், சவண்டிருப்பதனால் சவளி என்றும் ஆடை பல பொதுப் பெயர் பெறும். சவளுதல் - துவளுதல். மென் காற்றிலும் ஆடுவது (அசைவது) ஆடை, சவளி என்னும் தமிழ்ச் சொல் த்ஜவளி என்று தெலுங்கிலும் ஜவளி என்று கன்னடத்திலும் எடுப்பொலியுடன் ஒலிக்கப்படுவதாலும், நாம் அவ்வாறே தமிழிலும் ஒலிப்பதாலும், வடசொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது.

வடமொழியில் இச்சொல் இல்லை. எனவே ஜவுளிக்கடை, ஜவுளி வாணிகம் என்பன சவளிக்கடை, சவளி வாணிகம் என எழுதப்படுதலே பிழையற்றதாம்.

இதழ் : தேனமுதம் (மார்ச்சு 1972), அடை- 2, துளி - 13, பக்கம் - 51