உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

உவமைக்கவிஞர் சுரதா


பூவராகம் - நிலப்பன்றி

திருத்தில்லையில் வேளாளர் குலத்தில் வைணவ சமயத்தில் ஆ. பூவராகம் பிள்ளை 1899 ஆம் ஆண்டு நவம்பர்த்திங்கள் இருபத்தேழாம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் ஆதிமூலம் பிள்ளை.

சித்ரம் - அழகு
கரி - கைம்மா (யானை)
காந்தன் - கணவன்
அர்த்த சாஸ்திரம் - பொருள்நூல்

தன்னநுபவத்திற்கு இரண்டு பங்கும், ஆஸ்திக்கு ஒரு பங்கும், அறத்திற்கு ஒரு பங்குமாகப் பங்கிட்டு வைக்க வேண்டுமென்று பொருணுலே சொல்லுதலால், அறத்துக்கு நாலிலொரு பங்கு சொல்லப்பட்டது.

நூல் : திரிகடுகவுரை, இரெளத்தி ரி, ஆண்டு ஆறாம் பதிப்பு,
பாடல் - 21, பக்கம் - 13
உரையாசிரியர் : திருக்கோட்டியூர் இராமநுசாசாரியர்
கிருஷ்ணபக்ஷம் - தேய்பிறை
சுக்கில பக்ஷம் - வளர்பிறை


பினாமி - பேர் இரவல்

க. பாலசுப்பிரமணியன், பி. ஏ., பி. எல்,
சீர்காழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).

Punctuation – குறியீடு

இப் புத்தகத்தை ஊன்றிப் படிக்கும் மாணவர்கள் தம் வாழ்நாளைப் பயனுறச் செய்து கொள்ளல் வேண்டுமென்னும் நோக்கமே இதனைத் தொகுத்ததற்குக் காரணமாம். மாணவர்கள் செய்யுள்களையும் வசனங்களையும்