பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

193


பூகோளம் - தரை நூல்
பா. வே. மாணிக்க நாயக்கர்

நான் பா. வே. மாணிக்க நாயக்கரை அடிக்கடி பொன்மலையில் சென்று கண்டேன். மகாநாட்டிலிருந்து காட்டுப் புத்தூருக்கு வந்ததும் எனது லயன்ஸ் குறிப்புக்களைக் கொண்டு, உயிர் நூல், பூமி நூல் ஆகியவற்றை எழுதினேன். அவற்றை அடிக்கடி கொண்டு சென்று மாணிக்க நாயக்கரிடம் காட்டியதுண்டு. அவர் கலைச் சொற்களைக் கவனிப்பார் தனித்தமிழ்ச் சொற்களைப் போற்றி, இப்படி எழுதுங்கள் என்பார். பொருத்தமான புதிய சொற்களையும் சொல்லுவார். பூகோளம் என்பதை 'தரை நூல்' என்று திருத்தினார்

சுத்தானந்த பாரதியார்
(நூல் : ஆத்ம சோதனை)
சாமுத்திரிக நூல் - வடிமை நூல்

வடிவமை நூலிற் சொல்லும்
வனப்பெலாம் அமைத்து வேதன்
கடிமலர்ச் செங்கை வண்ணம்
காட்டிய உருவு கொல்லோ!

நூல் : நைடதம், நளன் தூதுப் படலம், பாடல் 89
நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன்
Statue – உருநிலை

குருவெனச் சென்னையிற் கூடி னானுக்கெந்
திருநலஞ் சான்றொளிர் செய்ய மாணிக்க
வருமணி யனையவ னாகு மில்லருக்
குருநிலை யெடுத்தன ருவத்தி நெஞ்கமே!

ஆசான் - ஆசிரியன் :

(இங்கு டாக்டர் மில்லர் அவர்களைக் குறித்தது) உருநிலை - Statue

நூல் : பாவலர் விருந்து