பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

உவமைக்கவிஞர் சுரதா



Telephone Wire — மின் கம்பி

நிஜாம் அரசனின் மந்திரியாகிய ஸர் ஜாலர் ஸங் என்பவர் விஷ பேதியால் இறந்து போனார். ராணியவர்கள் மின் கம்பி வழியாய் அவர் குடும்பத்தாருக்கு அநுதாபச் செய்தி அனுப்பினார்கள்.

இதழ் : தேசோபகாரி (1883) மார்ச்: Vol XXIII. No.3 பக்கம் - 60
சொல்லாக்கம் : இதழாசிரியர்.
Press - அச்சுக் கூடம்

அவர் இங்கிலாந்துக்குத் திரும்பின போது, அங்கே செங்கோலோச்சின நாலாம் எட்வர்ட் அரசன் கக்ஸ்தொனுக்கு வெகு இஷ்ட சிநேகிதராய் இருந்தமையால், அச்சடி வித்தையை இங்கிலாந்தில் தொடங்குவதற்கான அநுசரணை எளிதில் கிடைத்துக் கொண்டது. ஆகையால் கக்ஸ்தொன் தாம் திரும்பி வந்து சில நாளுக்குள்ளே உவெஸ்த்மின்ஸ்தர் நகரத்தில் 1471 இல் ஓர் அச்சுக்கூடம் ஸ்தாபித்து, அங்கே 20 வருஷக்காலம் அச்சடித் தொழிலாகிய ஜோலியையே நோக்கி வந்தார். -

இதழ் : தேசோபகாரி (1883- மே) மார்ச்: Vol XXIII; No.3 பக்கம் 60
சொல்லாக்கம் : இதழாசிரியர்
Train - புகைத்தேர் (ரயில்)

பொம்பாய் செல்லும் வழியில் கர்ஜட்டு ஸ்டேஷனிலிருந்து புகைத்தேர் குகைகளில் செல்லும்போது அமாவாசை இரவில் கண் புதைத்தாலும் அமையாத இருளைக் காணலாம்.

நூல் : கங்கா யாத்ர ப்ராபவம் (1887) பக்கம் - 18
நூலாசிரியர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார்
லதா கிருகம் - கொடி வீடு

இராமச்சந்திர ரெழுந்தருளி யிருக்கின்றாரென்று மைதிலியார் திருவுளமுகந்து நாணமுற்றவர்போற் றிருமுகங்கோட்டி யத்தோழியரைக் கடிவதொப்பக் கடிந்து சிறிதகன்று, இங்ங்னமே செல்குதுமேல் நாயகரை யினிக்-