தமிழ்ச் சொல்லாக்கம்
19
காணுவ, தெங்ஙனமெனத் திருவுளங்கொண்டு, ஏடி பாங்கி! நானாவிதக் கொடிமல்கி யெழிலுற்றிருக்குந் தீங்கனி யம்மாவை யின்னு மொருமுறை பார்ப்போமென்று மீண்டும் போகலும், இட்சுவாகு குலசம்பூதர், ஓ! ஓ! பெண்ணரசி யிங்கு வருகின்றாள் போலுமென்றோர் லதாகிருகத்துட் புகுந்தனர். (லதா கிருகம் - கொடி வீடு). அதாவது கொடி சூழ்ந்த வைப்பு.
நூல் | : | பிரசந்நராகவம் (1883) பக்கம் - 28 |
நூலாசிரியர் | : | கவித்தலம் துரைசாமி மூப்பனார் |
(ஜி. கே. கருப்பையா மூப்பனாரின் தாத்தா) |
இந்தியாவிலுள்ள பொன்னை இங்கிலாந்துக்குக் கொண்டுபோய், அவ்விடத்தில் அதை உருக்கி, மறுபடியும் இந்தியாவுக்குக் கொண்டு வருங்காலத்தில், எக்சேஞ்சு என்ற மாற்று கைக்கட்டணம் அதின் தலைமேல் சுமத்தி, 10 ரூபாயுள்ள பொருளை 15 ரூபாயாக இந்துக்கள் திரவியத்தைக் கருவறுக்கிறார்கள்.
இதுதான் இப்படியானதென்றால், இந்தியாவிலேயுள்ள 6, 7, 8, 9 மாற்றுள்ள பொன்னை, இங்கிலாந்திலிருந்து வரும், பொன் விலைக்குச் சமானமாக உயர்த்தி இந்தியா வர்த்தகர்கள் பறிக்கிறார்கள்.
இந்தப் பொன் எந்தத் தேசத்திற்கும் போகாமலிருக்க அதற்கு விலையை உயர்த்திப் பணம் பறிக்கும் இந்துக்களைக் கவர்னமெண்டார் கவனியாதது யாது காரணமோ? உயர்ந்த உத்தியோகஸ்தர்கள் தங்கள் சுயநலத்தைக் கோருகிறார்களேயொழிய பொது நலத்தைக் கருதவில்லையே!
இதழ் | : | ஸ்ரீலோகரஞ்சனி (15-8-1888) புத்தகம் - 1 இல . 3, பக்கம் - 8. |
இதழாசிரியர் | : | சி.கோ. அப்பு முதலியார் |
தெரிந்து கொண்டுதான் பேசல் வேண்டுமென்னுங் கவலையல்லாத திடசாலிகளாகிய ஆபாசத்தார் நன்னூல் விருத்தியில் 'பிற சொற்களும் வருமாலோ வெனின் சாத்தன் வந்தானென்றால் அவனுடையணி முதலியனவும் உடன் வருதல் கூறாதே யமைதல் போலுமென்க’ என்று ஆண்டுரையாசிரியர் கூறியதையும் ‘காது சேர்‘ என்பது முதலிய செய்யுட்களில் அவ்வாறு வருதலையும் உணர்ந்து இனியேனும் தம் உளறுபாட்டை விடுவாராக. பின்னும் ‘அஜ்ஞான-