உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

உவமைக்கவிஞர் சுரதா


வாசத்தைப் பிரித்துக் கூறவில்லை’ என்றும் ‘அக்கிரா சனத்திருத்தலைக் குறிப்பிக்கும் (வீற்றிருத்தல்) என்னும் பதத்தைப் பிரயோகித்ததே அதற்குச் சாக்ஷி என்றும் சொல்லுகின்றனர். இடையில் உடுத்தாடையில்லாதார் தலைககுத் தலைச் சாத்தணிந்தாற்போல ‘விற்றிருத்தல்‘ என்னும் பதத்துக்குப் பொருளறியாதர் வாதம் பண்ணுதலை மேற்கொண்டு வந்ததென்ன?

நூல் : நிராகரண திமிரபானு (1888) பக். 23, 24
நூலாசிரியர் : தி. முத்துக்குமார பிள்ளை

அக்கினி பாணம் - தீயம்பு

நூல் : ஸ்ரீ பக்த லீலாமிர்தம் (1888) பக்கம் - 17
நூலாசிரியர் : தஞ்சை மாநகரம் இராஜாராம் கோவிந்தராவ்

(குறிப்பு : இம்மொழிபெயர்ப்பு அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது)

உதய காலம் - நாளடி

நூல் : ஸ்ரீ பக்த லீலாமிர்தம் (1888) பக்கம் - 28
நூலாசிரியர் : இராஜாராம் கோவிந்தராவ்
குறிப்புரை : தஞ்சை மகாவித்துவான் மதுரை முத்து பாத்தியாயர்

(குறிப்பு : இச்சொல்லாக்கம் அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது)

Circular Road – வளைவு வீதி

இந்தக் கல்கத்தா பட்டன மானது கங்கையின் ஒரு கிளை நதியின் இடது பாகத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பட்டணம். இந்தப் பட்டணத்துக்கும் பங்காள சமுத்திரக் கரைக்கும் சுமார் நூறு மைல் நீளமும், ஒன்றரை மைல் அகலமும், சுமார் 8 சதுர மைல் விஸ்தீரணமுள்ளதாக விருந்து, இப்போது அப்படி இரண்டத்தனை விஸ்தீரணமானதாகத் தோற்றுகிறது.

1742-இல் மஹாராஷ்டிரர்கள் இதன் மேல் படையெடுத்து வராதபடி அந்த நதியின் வடபாக முதல் கிழக்குப் பாகம் வரையில் கோண வாய்க்கால் ஒன்றை வெட்டிப் பட்டணத்தைப் பாதுகாத்து வரப்பட்டது. இந்த மஹராஷ்டிர வாய்க்காலுக்கு அப்புறமும், தற்காலத்து (Circular Road) வளைவு விதிக்கும் இடையில் Chitpore - சீத்பூர் வடபாகத்திலும் நந்தன் பாக், சீல்தா, எண்டாலி, புஹார் சிம்லா, பாலிகஞ்சு தென்கிழக்காகவும், பவானியூர், அல்லியூர், கிட்டரபூர், தெற்குப் பாகத்திலுமாக அநேக பெரிய கிராமங்கள் சூழ்ந்திருக்கின்றன.