உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

31



Light House – விளக்குக் கூடு

விளக்குக் கூடு கப்பலோட்டிகளுக்குக் கண்ணொளி போன்றது. இது அவர்கள் கப்பலை இரவுக் காலத்தில் பரந்த கடலில் செலுத்தி வரும்போது வழியில் இருளில் மறைந்து கிடக்கும் பாறையில் தாக்கியாகிலும், மணற்றிடரில் செருகியாகிலும் அழிந்து போகாதபடி காக்கின்றது. அதாவது விளக்குக்கூடுள்ள விடத்தைச் சுற்றிலும் மேற்கண்ட அசந்தற்பங்கள் இருக்கின்றனவென்று எச்சரிக்கை செய்கின்றது போலாம். பண்டைக் காலத்தில் இக்கூடுகள் அபுரூபமாயிருந்தன. முதலில் 2200 - வருடங்களுக்கு முன்பு பாரோஸ் (Pharos) என்பவர்களால் அலெக்ஸான்டிரியாவில் கட்டப்பட்டிருந்தன வென்று சரித்திரஞ் சொல்லுகின்றது.

இதழ் : ஜீவரத்நம் (1902) வகை - 1, மணி - 1, பக்கம் - 15.
இதழாசிரியர் : T.R. சந்திர ஐயர், சென்னை,
இரசாயன நூல் - பொருட்டிரிவு நூல்

யாம் மதநூலைக் குறித்துச் சொல்லிய நியாயமே யிவற்றிற்கெல்லாம் பொருந்தும். நூலென்னும் பெயர்க்குச் சில வுளவே யன்றி முறை வழுவாது எளிதிற்றெளிவாக விளங்கும்படி யெழுதிய நூல்கள் அரிதினும்ரிதா யிருக்கின்றனவே. தற்காலத்தாசிரியர் ஒருவர், இரசாயன நூல் என்பதனைப் பொருட்டிரிவு நூலெனப் புதுப்பெயரிட்டழைத்தனர். (ஞானபோதினி - Sept. 1902)

இதழ் : யதார்த்த பாஸ்கரன் (1902) சம்புடம் - 1. இலக்கம் - 5. பக், 136.
இதழாசிரியர் : வி. முத்துக்குமாரசாமி முதலியார் B.A. சென்னை.
கர்வம் - தற்பொழிவு

தற்பொழிவும் டம்பமும் - பூமியிலுள்ள பல ஜாதிகளில் இந்துக்களே அதிக அகந்தைக்காரர். ஆனால் சீனர் இவர்களைவிட ஜாஸ்தி அகந்தைக்காரர் என்று தெரிய வருகிறது. ஐரோப்பியரை வெளியூர் மிலேச்சர், அன்னிய பிசாசுகள் என்று அவர்கள் சொல்லுவார்கள். ஆனால் அவர்களைக் கைகொடுத்தாட்டி அவர்களோடு குந்திச் சாப்பிடுவதால் தாங்கள் தீட்டுபட்டுப் போகிறோம் என்பதைச் சீனர் உணர்கிறதில்லையாம். இவ்வித கர்வம் சீன படிப்பாளிகளிடத்தில் அதிகமாய் உண்டு. தாங்கள் கற்றுணர்ந்த ஒன்பது கலைஞானங்கள் நீங்கலாக வேறு கலைகள் இல்லவே யில்லையென்பது அவர்கள் சாதனை. இந்துப்-