பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

உவமைக்கவிஞர் சுரதா


முனிவர் அறவோர்
ஆதாரம் பற்றுக்கோடு
கர்வம் பெருமிதம்
தாட்சண்ணியம் கண்ணோட்டம்
அருத்த சாஸ்திரம் பொருணூல்
தருமசாஸ்திரம் அறநூல்
பத க பெருங்கொடி
பகுதி முதனிலை
பூரண விசுவாசம் தலையளி
நூல் : திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர்).
பேராசிரியர் : டாக்டர் தெ.பொ.மீ. அவர்களின் ஆசிரியர்


யோகநித்ரை - அறிதுயில்

அறிதுயில் எல்லாவற்றையு மறியா நின்றே துயிலல். இதில் அறிதலும் துயிறலும் ஒருங்கு நிகழ்தலான் இது துணைவினையெனப்படும். இதனை யோக நித்ரையென்பர் வடநூலார்,

நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) பக்கம் : 55
ஆசி - வாழ்த்து

ஆசி - ஆஸிஸ் என்னும் வடசொல்லின் விகாரம். வாழ்த்து என்பது பொருள்.

மேற்படி நூல் : பக்கம் -285
உரையாசிரியர் : வித்வான் - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு