பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உவமைக்கவிஞர் சுரதா


தத்தம் - கொடுக்கப்பட்ட பொருள்
சூதிகாகாரம் - பிள்ளைப் பெறும் வீடு
திகுதிகு - சுடுகடு
நூல் : ஸ்ரீ பாகவத தசமஸ்கந்த கீர்த்தனை (1907)
நூலாசிரியர் : அனந்த பாரதி ஸ்வாமிகள்
மீமாம்சை - ஆராய்ச்சி

பூர்வ மீமாம்சை தருமமீமாம்சை யெனவும், உத்தரமீமாம்சை பிரம மீமாம்சை யெனவும் சொல்லப்படும். எதில் தருமத்தின் மீமாம்சை இருக்கிறதோ அது தரும மீமாம்சையாம். எதில் பிரமத்தின் மீமாம்சை யிருக்கிறதோ அது பிரமமீமாம்சையாம். மீமாம்சை - ஆராய்ச்சி

நூல் : வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) சிறப்புப் பாயிரம், பக்கம் - 17
விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள் (திருத்துருத்தி, இந்திரபீடம் - கரபாத்திர சுவாமிகள் ஆதீனம்)

குறிப்புரை: கோ. வடிவேலு செட்டியார் (சென்னை ஹிந்து தியலாஜிகல் காஹஸ் கூல்தமிழ்ப் பண்டிதர்)

அசாதாரண தருமம் - சிறப்பியல்பு
ஆசீர்வாத ரூபம் வாழ்த்து
திருக்கு அறிவு
நாநா - பல
பரஸ்பரம் ஒன்றற் கொன்று
பத்தியம் பாடல்
பிரதியோகி - எதிர்மறை
பிராக பாவம் முன்னின்மை
விசேஷம் அடைகொளி
விட்சேபம் புடைபெயர்ச்சி
நூல் : வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908)
குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்