பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

உவமைக்கவிஞர் சுரதா


சத்தம் ஓசை
நூல் : தருக்க கெளமுதி (செளமிய ௵ (1910)
நூலாசிரியர் : தஞ்சை மாநகரம் வெ. குப்புஸ்வாமி ராஜு
Atoms - உயிரணு

பூமியில் எங்கு பார்த்தாலும் பதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பதார்த்தங்களை ரசாயன சாஸ்திரிகள் பலவிதமாகச் சோதனை பண்ணிக் கடைசியில் அவைகள் துண்டு பண்ண முடியாமலிருக்கும்படியான நிலைமையை அடைகின்றன என்று ஸ்தாபித்திருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நிலைமையை உடையன ஏறக்குறைய எண்பது விதமானவை. அவைகளை உயிரணு (Atoms) என்று சொல்வது வழக்கம்.

நூல் : வியாஸ்ப்ரகாசிகை (1910), பக்.97.
பதிப்பாளர் : பி. எஸ். அப்புசாமி ஐயர்
(உரிமையாளர் : சக்ரவர்த்தினி பத்திரிகை)
ப்ரசண்ட மாருதம் - பெருங்காற்று (1909)

பின்பு அவ்வணிகன் புறப்படும்போது சக்திதேவன் தானும் கூட வருவதாகச் சொல்லல்ல அவனும் சம்மதித்து தங்களிருவர்க்கும் வழிக்கு வேண்டும் உணவு பதார்த்தங்களை நிரம்ப வெத்துக் கொள்ள இருவரும் கப்பலின் மீதேறிக் கடல்மார்க்கமாகப் பிள்ளை பிரயாணமானார்கள்.

பின்னர் அக்கப்பலானது நெடுந்தூரங்கடந்து அந்த உத்தலத் விபத்தை யடைவதற்குச் சொற்ப தூரத்திற் செல்லுங்கால் மின்னற் கொடியாகிய நாவுடன் கூடி முழங்குகின்ற கரிய மேகமாகிய இராக்கத வடிவம் ஆகாயத்திற் கிளம்பிற்று. அச்சமயத்தில் இலேசான பொருள்களை உயரவெடுத்தெறிகின்றதும், கனத்த பொருள்களைக் கீழே கொண்டமிழ்த்துகின்றதுமாகிய ப்ரசண்டமாருதம் (பெருங்காற்று) விதியின் ஆரம்பம் போல வீசிற்று.