பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

47


இதழ் : செந்தமிழ் (1910), தொகுதி -8, பகுதி - 2, பக்கம் -71
கட்டுரை : கதாசரித் சாசரம்
மொழிபெயர்ப்பாளர் : வீராசாமி ஐயங்கார்
அலிட்ரேஷன் - முற்றுமோனை

நளன்சீர் நவிலுநல நல்கும் என்பதில் நகர முற்று மோனையால் வந்திருப்பதைக் கவனிக்க. அங்கில முடையார் இதை அலிட்ரேஷன் என்பர்.

நூல் : நள வெண்பா மூலமும் அகல உரையும் (1910) நூற் சிறப்புப் பாயிரம், பக்கம் - 4
உரையாசிரியர் : தமிழ்வாணர் - மதுரகவி ம. மாணிக்கவாசகம் பிள்ளை
சர்வசுதந்தரம் - முற்றூட்டு

இராசநீதிகளையும், ஆசாராதிகளையும், வழக்கங்களையும், தெய்வத்தையும், புண்ணிய பாவ மோக்ஷ நரசாதிகளையும், சிவஞானத்தையும் யாவர்க்கும் உணர்த்துவதும், பூர்வ சரிதங்களை விளக்குவதும் இவ்வியற்புலமையன்றோ? இத்தகைய உயர்வு தாழ்வுகளையறிந்தே பூர்வ அரசர்களில் எத்தனையோ பேர், இயற்புலவர்கட்கு முற்றூட்டாகப் (சர்வசுதந்தரம்) பல கிராமங்களைத் தானஞ்செய்தும் பற்பல ஆடையாபரண வாகன முதலிய விசேஷ மரியாதைகளைச் செய்தும் பாதுகாத்ததுடன் தமக்கு முக்கிய மந்திரிகளாகவும், உயர்ந்த துணைவர்களாகவும், தம்மினுமிக்க மரியாதையுடன் எப்போதுந்தம்முடன் (இவ்வியற்புலவர்களையே) வைத்து, அவர்கள் சொல்வழி நின்று புவிபுரந்து புகழ்புனைந்து வாழ்ந்தார்களென்பது புறநானூறு முதலிய பழைய நூல்களால் நன்கு புலப்படுவதாகும்.

நூல் : இயலிசைப்புலவர் தாரதம்மியம் (1911) பக்கம் - 3
நூலாசிரியர் : மு. ரா. கந்தசாமிக் கவிராயர்
Photo – நிழல்படம்

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 5-மணியோடு கண்காட்சி சாலை முடிந்ததும் அன்றிரவு 8மணி முதல் 10 மணி வரை செயின்டு மேரி ஹைஸ்கூல், போனரே சாமியார் அவர்கள் நிழல்படம் காட்ட ம-ள-ள-ஸ்ரீ N.S. ஜெம்புணாதய்யர் அவர்கள், ஊர்வன ஜாதி,பட்சி ஜாதி இவைகளைப் பற்றி ஒரு உபந்நியாசம் செய்தார்.