பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

உவமைக்கவிஞர் சுரதா


இதழ் : விவேக போதினி (நவம்பர் 1911) எண்,5. பக்கம் - 223
சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர்
Vote - வாக்கு

மேற்றிசை மதங்கள் தற்காலத்திய 'ஸயன்ஸ்' என்னும் சாஸ்திர வாராய்ச்சியின் எதிர்நிற்கச் சத்தியற்று, படு சூரணமாய் மண்ணோடு மண்ணாய் மாறியும் குருட்டு நம்பிக்கையையும் மூட விசுவாசத்தையும் மிஷனரி சபைகளில் (vote) வாக்கின்பேரில் முடிவாகும் சித்தாந்தங்களையுமே பிரமாணமாகக் கொண்டிருக்கும் மேற்றிசை மேற்பூச்சு மதங்களெல்லாம் சாஸ்திர வாராய்ச்சியாகிற பெருஞ் சம்மட்டியால் மொத்துண்டு இருந்தவிடந் தெரியாமல் பஸ்பமாகியும்; சாஸ்திர ஆராய்ச்சி விர்த்தியாக ஆக, அவைகளை யனுசரித்து அத்தேசத்திய மத நூல்களுக்கெல்லாம் பொருள் செய்தும், கடைசியில் அதுவும் சரிப்படாமற் போகவே, அம்மத நூல்களெல்லாம் குப்பை கூளங்கள் நிறைந்த அறைகளுக்கு அலங்கார சாமான்களாக மாற நேரிட்டும், மேற்றிசையில் உண்மையாய் மதவிசாரணை செய்பவர் தங்கள் மதத்தின் உபயோகமற்ற தன்மையைக் கண்டு, அதைத் துறந்து தீர்க்க சந்தேகிகளாகவும் இருந்து வருகிற இச்சமயத்தில் உண்மையாய் உயிருடன் இருக்கும் மதங்கள் அமிருத கலசங்களென்னும்படியான வேதங்களில் ஞானாமிர்தத்தைப் பானம் பண்ணிய இந்துமதமும் பெளத்த மதமுமே என்பது ஒர் அதிசயமல்லவா?

நூல் : விவேகானந்த விஜயம் (1912). பக்கங்கள் :124, 125
நூலாசிரியர் : மஹேச குமார சர்மா
Boarding House - விடுதி வீடு

ஆங்கிலம் கற்றற்கு நமது பிள்ளைகள் கொழும்பு, மதுரை, சென்னை, புதுக்கோட்டை முதலிய விடங்களுக்குப் போய் அசெளகரியத்தோடு படிப்பதைப் பார்க்கிலும் நம்மவர் வசிக்கிற பெரிய ஊர்களான தேவி கோட்டை காரைக்குடி, கானாடு காத்தான் முதலிய விடங்களில் உயர்தர வித்தியாசாலை (High School) களும் அதையொட்டி மாணவர் விடுதிவீடு (Boarding House) களும், ஏற்பட்டுவிட்டால் நிரம்ப செளகரியமாக விருப்பத்தோடு ஜாஸ்தியான பிள்ளைகள் படிக்கவும் ஏதுவாகும்.

நூல் : வியாசங்களும் உபந்தியாசங்களும் (1913) இரண்டாம் பதிப்பு: பக்கம் : 31
நூலாசிரியர் : மு. சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி