பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

49ஏழிசை ஒலிகள்
ச, சட்சம் மயிலொலி
ரி, ரிடபம் எருத்தொலி
க, காந்தாரம் யாட்டொலி
ம, மத்திமம் கிரவுஞ்சவொலி
ப, பஞ்சமம் குயிலொலி
த, தைவதம் குதிரையொலி
நி, நிடாதம் யானையொலி
நூல் : மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 15
நூலாசிரியர் : மாகறல் கார்த்திகேய முதலியார் (சைதாப்பேட்டை, கண்டி வெஸ்லேனியன் மிஷன் தியலாஜிகல் காலேஜ் தமிழ்ப்பண்டிதர்)


அபிமானம் - பற்றுள்ளம்

ஆரியம் வேதமுதலியன நிறைந்துள்ள தெய்வமொழி என்று அடிப்படுகின்றமையின், தெலுங்கு முதலியன அதினின்று பிறந்தன எனின் அவ்வம்மொழியார் கனிவு காட்டுதலும், தமிழினின்று அவை பிறந்தனவெனின் முனிவு காட்டுதலும், பற்றுள்ள மேயன்றி முறைமையாகாது. அப்பற்றுள்ளத்தினின்றும் நீங்கி யுண்மை யெதுவென ஆராய்ந்து தெளிதல் வேண்டும். பற்றுள்ளம் - அபிமானம்.

நூல் : மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 34
நூலாசிரியர் : மாகறல் கார்த்திகேய முதலியார்
கிரகபதி - கோளரக

செந்தமிழ் நிலம் நடுவிலும், அதனைச் சூழப் பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடும், அக்கொடுந்தமிழ் நாட்டைச் சூழச் சிங்களம் சோனக முதலிய நாடுகளும் வைத்துக் கூறினதை யுய்த்துனரின் செந்தமிழ்க்குப் பன்னிரண்டு கொடுந்தமிழ் மொழியும் அணுக்கவியைபுடையன என்பதும், சிங்களம் சோனக முதலியன சேய்மை யியைபுடையன என்பதும் பெறப்பட்டமை காண்க. ஏனைய கோள்களுக்கும் அக்கோள்களி னடுவிலுள்ள சூரியனுக்கும் இயைபுண்மை போல, ஏனையமொழிகளுக்கும் அம்மொழிகளி னடுவிலுள்ள செந்தமிழ்க்கும் இயைபுண்மை பெற்றாம். சூரியன் கோளரசென்பது போலத் தமிழ் மொழியரசென்பது பெறப்படுகின்றது. கோளரசு - கிரகபதி.