பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

55


என்னும் இக்குறளைக் கவனியுங்கள். உலகத்தில் செல்வர்கள் சிலராக, நல்கூர்வார் (தரித்திரர்) பலராதற்குக் காரணம் யாதென் றாராய்ந்துழி; அது தவஞ்செய்வார் சிலராகவும் செய்யாதார் பலராதலும் போல வென்றார்.

நூல் : தவம் (1917) பக்கம் - 4.
நூலாசிரியர் : ச. தா. மூர்த்தி முதலியார் (தமிழ் நாட்டில் தமிழனே ஆளவேண்டும்; தமிழ்க்கொடி பறக்கவேண்டும் என்று முதன்முதல் கவிதை பாடியவர்)
களந்தை கிழான்

சைவ சித்தாந்த சமாஜத்தின் பன்னிரண்டாவது அண்டுவிழா இச்சமாஜத்தின் பன்னிரண்டாவது ஆண்டு நிறை விழா 1917ம் வருடம் டிசம்பர் ௴ 23, 24, 25ம் தேதிகளில் சென்னைக்கடுத்த பிரம்பூர் செம்பியத்தில் அமைத்துள்ள ஓர் நாடகக் கொட்டகையில் கூடி சமாஜத்தின் நிர்வாக சபை அங்கத்தவரில் ஒருவராய் வெம்பியம் கிராம முனிசீப் ஸ்ரீமான் - பண்டித ரத்தினம் புழலை - திருநாவுக்கரசு முதலியாரவர்கள் (Honorary Magistrate) பெரு முயற்சியாய் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தாந்த சரபம் - அஷ்டாவதானம் சிவபூ கலியான சுந்தர யதீந்திர சுவாமிகள் அத்திராசனம் வகித்து விழாவை அணிபெற நடத்தினர்.

களந்தை கிழான் (கி. குப்புச்சாமி
இதழ் : சித்தாந்தம் (1918 ஜனவரி) தொகுதி - 7, பகுதி - 1, பக்கம் - 17,
கலியான சுந்தரம் - மணவழகு

1917இல் டிசம்பர் மாதம் 24உ செம்பியத்தில் கூடிய மகாசமாஜக் கூட்டத்தில் நடந்த தீர்மானங்கள்.

1. இவ்வருடத்து அறிக்கைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது.

2. ஸ்ரீமான் - கி - குப்புச்சாமி முதலியார் அவர்கள் ஐந்து வருஷமாகப் புரிந்த உதவிக்காக சமாஜம் நன்றி பாராட்டுகின்றது.

சபைத்தலைவர் : சித்தாந்த சரபம் - அஷ்டாவதானம் சிவபிரீ - கலியாண கந்தர யதீந்திர சுவாமிகள், சென்னை