பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

59



1908 - தாம் பாடிய 'ஸ்வதேச கீதங்கள்' என்ற பாடல் தொகுதியை வெளியிட்டார்.

1918 - பரலி சு. நெல்லியப்பர் சுதேச கீதங்களை நாட்டுப் பாட்டு என்ற பெயரால் பிரசுரம் செய்தார்.

நூல் : பாரதியார் கவிதைகள். செப்டம்பர் - 1993
தொகுப்பாளர் : சுரதா கல்லாடன்
பரிணாமம் திரிபு
கிரியா தொழில்
பரிமாணம் அளவு
அனுக்கிரகம் அருளுதல்
நூல் : நாநாஜீவவாதக் கட்டளை (1917)
நூலாசிரியர் : ஸ்ரீ சேஷாத்திரி சிவனார்
குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்

(லோகோபகாரி பத்திராசிரியர்)

Ticket - பயணச் சீட்டு

பூலோக நரகம் என்பதைப் பலர் பலவாறு கொள்வர். பூலோகத்திலும் நரகம் உண்டோ? என்று சிலர் கருதுவர். அந்நகரம் யாது? அஃது இருப்புப் பாதை (ரெயில்வே) மூன்றாம் வகுப்பு வண்டித் தொடர். மூன்றாம் வகுப்பு வண்டிகளில் சிறப்பாகத் தென்னிந்திய ரெயில்வே மூன்றாம் வகுப்பு வண்டிகளில் ஏழைச் சகோதரர்கள் படும் துன்பத்துக்கு அளவு உண்டோ? மூன்றாம் வகுப்புப் பயணச் சீட்டு (டிக்கட்) பெறுவது பெருங் கஷ்டம்.

இதழ் : தேச பக்தன் - நாளிதழ், சென்னை 2, 1. 1918
ஆசிரியர் : திரு.வி.க.
நிர்க்கந்தரூபம் - திருவுருவம்
மேருமந்தர புராணம் மூலமும் உரையும் (1918)