பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

உவமைக்கவிஞர் சுரதா


Conductor - நடத்திக்கொண்டு போகிறவன்

மின்சாரம் சாதாரண உலர்ந்த காற்றின் வழி சுலபமாகச் செல்வதில்லை, ஜலத்தின் வழியும் ஈரமான வஸ்துக்களின் வழியேயும் இரும்பு முதலான உலோகங்களின் மூலமாயும் சீக்கிரம் செல்லும்.

ஜ வந்துக்களின் உடம்பின் வழி அதி சுலபமாய் மின்சாரம் பாயும். கண்ணாடியின் வழியும் உலர்ந்த தரையின் வழியும் செல்லாது. முன் சொன்ன வகை வஸ்துக்களுக்கு கண்டக்டர்கள் என்று பெயர், (கண்டக்டர் - நடத்திக் கொண்டு போகிறவன்).

ஆதலால் மழை பெய்து இடி இடிக்கும் காலத்தில், மரங்கள் மேலும் உன்னதமான வீடுகளின் மேலும், இடி விழுகின்றது.

இதழ் : தமிழ்நேசன் (1919) தொகுதி - 2, பகுதி - 2,
கட்டுரை : மின்சாரமும் மின்னலும்
கட்டுரையாளர் : M.C.A அநந்த பத்மநாபராவ், M.A. L.T., (சென்னை பிரஸிடென்ஸி கலாசாலை பெளதிக சாஸ்திர போதகர்)
சிலேடை - பல்பொருட் சொற்றொடரணி

சிலேடையென்பது ச்லேஷா வென்னும் ஆரியமொழியின்றிரிபு இங்ஙணம் வரல் தற்பவம்.

இதனைத் தமிழணி மரபுணர்ந்தார் பல்பொருட் சொற்றொடரணியென்றும் வடநூலார் ச்லேஷாலங்கார மென்றுங் கூறுவர். சிலேடையென்பதன் பொருள் தழுவுதலுடைய தென்பது.

அஃதாவது உச்சரிப்பில் ஒரு தன்மைத்தா நின்ற சொற்றொடர் ஒன்றற்கு மேற்பட்ட பொருளைத் தழுவுதல்.

நூல் : கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் (1920) பக்கம்.1
உரையாசிரியர் : சதாவதானம் தெ. கிருஷ்ணசாமி பாவலர்