பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

61


Scarlet Fever - செம்பொட்டுச் சுரம்

1870வது வருஷம், ஆலிஸ் இராஜகுமாரியார் சரித்திரத்திலும், ஐரோப்பாவின் சரித்திரத்திலும் அதிக முக்கியமானது. இவ்வருஷ முதலில் லூயிஸ் இராஜகுமாரரும் அதற்கு மேல் விக்டோரியா இராஜகுமாரியும் சிறு இராஜகுமாரனும் செம்பொட்டுச்சுரம் (Scariet Fever என்னும் வியாதியால் வருந்தினார்கள்.

நூல் : பன்னிரண்டு உத்தமிகள் கதை (1920) பக்கம். 147
தமிழாக்கம் : திவான் பகதூர் வி. கிருஷ்ணமாச்சாரியார்.
Legal Advice – புத்திமதி

நியாயாதிபதி : பாரிஸ்டரே, நல்லது நீர் கைதியிருந்த கூட்டிற்குள் போவீர்.

பாரிஸ்டர் : ஐயா, எனக்குக் கைதியைத் தப்பித்து விடப் புத்திமதி சொல்ல அதிகாரம் கிடையாதா என்று சொல்லிக் கொண்டே கூட்டிற்குள் சென்றார்.

நூல் : சிறுமணிச்சுடர் (1920) பக்கங்கள் : 14, 15
நூலாசிரியர் : மதுரை எஸ். ஏ. சோமசுந்தரம்
திலகம் - பொட்டு

திலகம் என்பது திலதம் எனவும் வழங்கும். இது வடசொல். இதனைத் தமிழர் பொட்டு என்பர். இது, 'பொட்டணியா னுதல் போயினு மென்று பொய்போலிடை' என மணிவாசகர் கூறலானு மினிது விளங்கும்.

நூல் : சீகாளத்திப்புராணம் மூலமும் உரையும் (1920) பாயிரம், பக். - 3
உரையாசிரியர் : மகாவித்வான் காஞ்சிபுரம் இராமாநந்தயோகிகள்
கண்யம் மேம்பாடு
குதவருத்தம் மூலநோய்
அந்தரியாமி உள்ளீடா யிருப்பவன்
பாவம் அறன்கடை
சம்பத்து செல்வம்