உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

உவமைக்கவிஞர் சுரதா


கீர்த்தனை - பாட்டு

கீர்த்தனை என்பது வடமொழிச் சொல்லாயினும் தமிழில் பாட்டென்னுஞ் சொல்லோடு வேற்றுமையின்றிப் பயின்று தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. பாட்டென்னுஞ் தமிழ்ச் சொல்லோ இசைத் தமிழின் பாகுபாட்டையுணர்த்தும் தேவபாணி என்பது முன்னோர் ஆட்சி.

நூல் : பரமானந்தப் பக்திரஸ்க் கீர்த்தனை (1920) முகவுரை - பக்கம் - 5
நூலாசிரியர் : தூத்துக்குடி டி. டி. சங்கரதாஸ் சுவாமிகள் (தமிழ்நாடகத் தலைமை நாடகாசிரியர்)
பாலசுந்தரம் - இளவழகனார் (1920)
குருகுலம் அழகரடிகளார்
வாழ்க்கைக் குறிப்புக்கள்
பிறந்த ஊர் : மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம்
ஆண்டு : 1904 ஏப்ரல்
பெற்றோர் : சுப்பராய பிள்ளை திரு. மாணிக்கம்மாள்
மரபு : வள்ளலாரைத் தோற்றுவித்த 'சீர் சுருணிகர்'
பெயர் : பெற்றோரால் அமைந்த பெயர் பாலசுந்தரம் ஆசிரியரால் அமைந்த பெயர் இளவழகனார் தீக்கையால் அமைந்த பெயர் அழகரடிகள்
1920.16 ஆம் வயதில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார்க்கு மாணவர்
நூல் : குருகுலம் - திருக்குறள் பீடம், அழகரடிகள் வாழ்க்கை வரலாறு
நூலாசிரியர் : த ஆறுமுகம் பக்.53, 54.
ஞானவாசகம் - அருட்பா
சித்தவிருத்தி - நெஞ்சிற் பரப்பு
நூல் : திருவாதவூரடிகள் புராணம் (1923) (கடவுள்மாமுனிவர்)
குறிப்புரை : பிரசங்க பாநு கா. இராஜாராம் பிள்ளை