பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

73


நூல் : திருக்குறள் வீட்டின் பால் - முதற் பதிப்பு (1923) பக்கம் -1
நூலாசிரியர் : ஜே. எம். நல்லசாமி பிள்ளை, பீ.ஏ., பி.எல்.
பதிகம் - பத்து

மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம் புற்றி டத்தெம் புராண னருளினாற் சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கந்தொழப் பெற்றதால்

என்னுந் திருப்பாவின்கண் பதிகம் என்னும் வடசொல் ஈரிடத்துளது. முன்னது ’பிரதீகம்’ என்னும் வடசொற்றிரிபு. பிரதிகம் என்னுஞ் சொல் பிண்டம் அஃதாவது சரீரம்’ என்னும் பொருட்டு பின்னது, ’பதிகம்’ என்னும் வடசொற்றிரிபு இப்பங்திகம்' என்னுஞ் சொல்லிற் பங்தி என்பது ’பத்து’ என்னும் பொருட்டு; இராவணனுக்குப் ’பங்தி கண்டன்’ என்னும் பெயரிருத்தலறிக.

நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924) பக்கம் 127
நூலாசிரியர் : வா. மகாதேவ முதலியார் (கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)
சுப்பிரமணி - வெண்மணி

தந்தையின் சிறிய தாயாராகிய சண்முகத்தம்மாள் சில காரணங்களால் இக் குழந்தையினிடத்தில் பற்றுடையவளாய் சிரத்தையுடன் குழந்தையைப் பாதுகாத்து வளர்த்து வரிவாளாயினாள். இம்மைந்தனுக்குத் தந்தையின் தந்தையராகிய பேரனார் சுப்பிரமணி (வெண்மணி, என்னும் பிள்ளைத் திருநாமம் அமைந்தது.

நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணியபிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக். 4
நூலாசிரியர் : மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)