74
உவமைக்கவிஞர் சுரதா
நம் நண்பர் பெரிது முயன்று செய்த இப் போது நலம் ஊருக்கும் நாட்டுக்கும் நன்மை தருவமன்றி அவர் தங் குடும்பத்துக்கும் நன்மை பயப்பதாயிற்று. நாளடைவில் நமது நண்பர் இந்நகரத்துச் சிறந்த செல்வர்களில் ஒருவராயினார். அப்பால் தாம் சொந்தத்தில் பணக்கூடம் ஒன்று அமைத்து வைக்கும் தகுதியுடைய ராயினார். 1087ம்௵ தமக்கு உற்ற நண்பராகிய திருவாளர் P.M.கைலாசம் பிள்ளையவர்களைத் துணைக்கொண்டு K.S.பாங்க் என்னும் பெயரால் மட்டிடப் பெறாத (Unlimited) பணக்கூடம் ஒன்றை அமைத்து வைத்தனர்.
மேற்படி நூல் : பக், 45
இனி நமது நண்பரின் பொதுநல விருப்பும் உழைப்புங் கண்டறிந்த பல பொதுநலச் சங்கங்களில் இவர் உதவியை நனி விரும்பிக் கொண்டார்க்ள். திருநெல்வேலி நகரப் பாதுகாப்புச் சங்க (முன்சிப்பாலிட்டி)த்தில் நெடுங்காலம் அங்கத்தினர் கவுன்சிலர் ஆக இருந்து ஊரார் உவக்குமாறு உழைத்து வந்தார்.
மேற்படி நூல் : பக்கம் - 59
சேதுபதியவர்கள், மற்ற ஆடம்பரமான வரவேற்பு முதலியவை விரும்பிலரேனும், வைதீகமான சிவபூசை வழிபாட்டில் மிகப் பற்றுடையவர் என்பதும், அதனைச் சிறக்கச் செய்வதில் கருத்துடையவர் என்பதும் தெரிந்துகொண்ட நண்பர், அதற்குரிய துணைக் கருவிப் பொருளை (உபகரணங்களைச் சிறப்பாக செய்து வைத்திருந்தார்.
மேற்படி நூல் : பக்கம் - 63
பக்தியிற் சிறந்த சேதுபதியவர்கள், திருக்கைலாசம் போல் தோன்றிய பூசை மடத்தின் அமைப்பும் சிறப்புங் கண்டு வியந்து பேரின்பத்தில்: