உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

75


(பரமானந்தத்தில்) மூழ்கினவராய் ஐம்புலனும் ஓர் புலனாக ஒடுங்கிய மனத்துடன் உள்ளமுருகிச் சிவ வழிபாடு செய்து முடித்தார்.

மேற்படி நூல் : பக்கம் - 64

தரும சங்கடம் - அறவழியிடர்

நண்பர் தம்முடைய மூத்தமகனாகிய துரைசாமி பிள்ளைக்கு திருமண முயற்சி தொடங்குங்கால் இருதலையிடரில் அகப்படலுற்றார். ஆயினும் இது உலகத்தில் புதியதன்று. இடை இடையே நிகழ்வதொன்றாம்.

நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் திரு. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச்சுருக்கம் (1924) ப73
நூலாசிரியர் : மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)

சங்கீத வித்வான்கள் - இசைப் புலவர்கள்

தற்கால வழக்கிலுள்ள சுமார் 40 சாதாரண இராகங்களை இனங்கண்டு பெயர் சொல்லத் தெரிந்தவர். மேலும் பாட்டுக் கச்சேரிகளை ஆதரிப்பதுண்டு. பாடகர்களின் தராதரங்களைச் சரியாய் மதிக்க வல்லவர். நாக சுரங்களையும் நன்றாய்க் கேட்டுச் சுவையுணர்வார். ஆகையால் இசைப்புலவர்களும் (சங்கீத வித்வான்களும்) இவர் தம் நட்பையும் ஆதரவையும் பெரிதும் விரும்பினார்கள்.

மேற்படி நூல் : பக். 73

சம்மெரி வியாச்சியம் - தொடுத்துரை வழக்கு
கிரிமினல் கேஸ் - தண்ட வழக்கு

அக்குடிகள் முந்திய ஏற்பட்டின்டி அறுப்புக்களத்தில் வரம் பிரித்தாக்க வேண்டிய நெல் தீர்வையை முறைப்படி செலுத்தாமலும், அதனால் வருங்கேடு இன்னதென்றறியாமலும் ஒழுங்கீனமாய் நடக்கத் துணிந்து விட்டார்கள். கலவரம் செய்யவும் தொடங்கினார்கள். ஆகையால் குடிகளுக்கும் ஜமீனுக்கும் தொடுத்துரை வழக்கும் (சம்மெரி வியாச்சியம்) தண்ட வழக்கும் (கிரிமினல் கேசும்) ஏற்பட்டன.

மேற்படி நூல் : பக், 81.