பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

உவமைக்கவிஞர் சுரதா


விசேஷங்கள் - சிறப்புச் செயல்கள்

இன்னும் ஜமீன் குடிகளில் வீடுகளில் நடக்கும் நன்மை தீமைகளாகிய சிறப்புச் செயல் (விசேஷங்கள்)களுக்கு அவரவர்கள் தகுதிக்கேற்ப நன்கொடை அளித்து வரும்படி ஏற்பாடு செய்தார்.

மேற்படி நூல் : பக்கம் 83

Appeal - அப்பில் மேல்வழக்கு
Preview Council – பேராச் சங்கம்

அப்பால் சென்னை உயர்தர நியாயமன்றில் (ஜில்லாக்கோர்ட்டில்) ஜமீன் பொருட்டாக மேல் வழக் (அப்பீல்) கிட்டதில் ஷை மலைகளின் முழு உரிமையும் ஜமீனுக்குத்தான் உண்டென்றும் சர்க்காருக்கு எவ்வித உரிமையும் கிடையாதென்றும் உறுதி கூறப்பட்டது (சித்தாந்தம் செய்யப்பட்டது) அப்பால் சர்க்கார் பொருட்டாக, பேராச் சங்கத்தில் (பிரிவி கவுன்சில்) எதிர்வாதம் செய்யப்பட்டது.

மேற்படி நூல் : பக்கம் - 86

சர்வ சுதந்தர பாத்தியம் - முழு உரிமை

விசாரணை முடிவில், வழக்கிடப்பட்ட மலைகள், நீடித்த காலமாகச் சமீன் ஆளுகையில் இருந்து வந்திருக்கிறதென்றும் ஆனால் முழு உரிமை (சர்வ சுதந்தர பாத்தியம்) ஜமீனுக்குக் கிடையாதென்றும், முழு உரிமை சர்க்காருக்குத்தான் உண்டென்றும், சர்க்காருக்குட்பட்டுச் சில உரிமையுடன் ஜமீன் அனுபவிக்கலாம் என்றும் சில்லா நீதிபதியால் தீர்ப்புச் சொல்லப்பட்டது.

மேற்படி நூல் : பக்கம் - 86

Major - தகுந்த வயது வந்தவர்கள்
Minor - இளைஞர்கள்
Registrar - பதிவாளர்

அவருடைய பிள்ளைகளில் தகுந்த வயது வந்தவர்களும் (மேஜர், இளைஞர்களும் மைனர்) இவர்களெல்லாரும் நல்ல குணமுடையவராகையால்