80
உவமைக்கவிஞர் சுரதா
பரீக்ஷைகளில் தேறி வேலை சம்பாதித்துக் கொண்டவர்களில் சிலர், முக்கியமாகக் கல்லூரிகளில் அமர்ந்திருக்கும் சொற்பெருக்காசிரியர்கள் (Professors& Lecturers) நல்ல செளகரியம் வாய்ந்த நிலைமையில் வாழ்நாளை யாரம்பிக்கின்றனர். அவர்கள்தாம் ஆங்கிலத்தில் கற்றதையும் தமது ஆராய்ச்சியின் பயனையும் இதரர்களுக்கு உபயோகப்படுமாறு தேச பாஷைகளில் தெரிவிக்க வேண்டிய சாவகாசமும் பொருளும் அவர்களுக்குண்டென்று தோன்றுகின்றது. ஆனால் அவர்களில் பெரும்பான்மையோர் இத்தகைய ஊக்கமும் கவலையும் மேற்கொள்வதில்லை. எஞ்சிய சிலர் ஆங்கிலத்தில்தான் தம்முடைய கல்வித் தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்.
நூல் | : | தமிழ்நூற் பெருக்கம் (1924) பக்கம் - 18 |
நூலாசிரியர் | : | வை. சூரியநாராயண சாஸ்திரி, எம்.ஏ.எல்.டி., |
Hair Pin | - | தலைமயிர் ஊசி |
Nail Brush | - | நகக்குச்சு |
Mons Veniris | - | அல்குலின் மேடு |
Labia Majora | - | அல்குலின் பெரிய உதடுகள் |
Abortion | - | கருவழிவு |
Stop Cork | - | அடைப்புக்குழாய் |
Cancer | - | பிளவைக் கட்டி |
நூல் | : | மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) |
நூலாசிரியர் | : | கோ.கி. மதுசூதன் ராவ் (மதராஸ் கவர்ன்மெண்ட் பிரசவ வைத்தியசாலையில் மருத்துவ மாணாக்கியர்களின் உபாத்தியாயர்) |
நல்லொழுக்கம் நாட்டிலில்லை. சூதே சொந்தமாயிற்று. வாதே வழக்கமாயிற்று. தீதே தேடலாயிற்று சட்டையுடன் சாப்பிடுதலே சகஜமாயிற்று. அரைக்கை சட்டை அபரிமிதமாயிற்று. மணிக்கட்டு கெடியாரமே ரிஸ்டுவாச்சே (Wrist Watch) பெஸ்ட்வாச் (Best Watch) சாயிற்று.