பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

81


நூல் : தமிழ்க் கல்வி (1924) பக்கம் 66
நூலாசிரியர் : மனத்தட்டை எஸ். துரைசாமி அய்யர்
அவகாசம் - இயைந்த காலம்
அவதரித்தல் - பிறத்தல்
ஆராதனை - வழிபாடு
வாகனம் - ஊர்தி
சரசுவதி - சொற்கிறைவி
சரசுவதி - பனுவலாட்டி
இரத்தம் - புண்ணீர்
பிரசவ வீடு - மகப்பெறும் இல்லம்
விவாகச் செயல் - மணவினை
விவாகச் சிறப்பு - மணவிழா
ஆகாய வாணி - விட்புலச் சொல்
நூல் : உதயன சரிதம் (1924)
மொழி பெயர்ப்பு : பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்.
கோஹினோர் - ஒளிமலை

தென்னிந்தியாவில் வஜ்ரகருவூர் என்னும் ஒரு க்ராமம் உண்டு. அப்பெயர், வைரக்கற்களைத் தன் வயிற்றுள் அடக்கியிருக்கும் ஊர் என்று பொருள்படும். அவ்வூரின் சுற்றுப்புறமெங்கும் பண்டை நாளில் வைரக்கற்கள் புதைந்திருந்த சுரங்கங்கள் பல இருந்தன.

ஆப்பிரிக்கா அமெரிக்கா முதலிய கண்டங்களில் வைரக்கனிகள் கண்டுபிடிக்கப்படு முன்னர் வைரக்கற்களுக்காக உலகெங்கும் பேர்பெற்றது இவ்வூர்தான்.

மொஹலாய அரசர்கள் வீற்றிருந்ததும், விலைமதிக்க முடியாதபடி சிறந்து விளங்கியதுமான மயிலாஸ்னத்தின் மேலிருந்த வைர மணிகளெல்லாம் இங்கிருந்து போனவைகளே. இப்போது இங்க்லாந்து அரசர் முடியில் அணிபெறத் திவ்விய ஒளி வீசும் கோஹினோர் அல்லது ’ஒளிமலை’ எனப்படும் உயர்தர வைரமணியும், இவ்வூரில் முதன்முதல் அகப்பட்டு, பின் ஆப்கானியர் சீக்கியர் முதலியவர் கைமாறி, கடைசியில் ஆங்கிலேயர் கைப்பட்டது.

நூல் : பத்மினி (1924), பக்.41,42,
நூலாசிரியர் : வே. முத்துலாமி ஐயர், எம்.ஏ. எல்.டி.,

(சென்னைத் தமிழர் கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்)