பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

83


வியாக்ரபாதர் - புலிக்கால் முனிவர்

மழமுனி என்னும் இயற்பெயர் கொண்ட வியாக்ரபாத (புலிக்கான்) முனிவர்க்கும், வசிட்ட முனிவர் உடன் பிறந்தாளுக்கும் மகவாய்த் தோன்றிக் குழவிப் பருவத்திற் பசிக்குப் பாற்கடல் பெற்ற உபமந்யு மாமுனிவர் பல்லாயிர முனிவரும், யோகியரும் தம்மைப் புடை சூழத் திருக்கைலை மலையின் தாழ் வரையின் கட்சிவத்யான பரராய்ச் சிவானந்த பலி தராய் எழுந்தருளியிருப்புழி அங்கு ஆயிரஞ் சூரியரொரு காலத்து உதித்தாற் போல்வதொரு பேரொளி தோன்றிற்று.

நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 2
நூலாசிரியர் : வா. மகாதேவ முதலியார்

(கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)

நாயன் - வழிகாட்டி

அன்பின் பெருமை வலிமை பயன் இவை அங்கையினெல்லிபோல இனிதின் விளங்கவும், அற்புச் சுவை ததும்பி வழிந்தோங்கவும் ஏனைச் சுவைகளாங்காங்குத் தோன்றவும் அமைந்த அறுபான் மூவர் நாயன்மார் அருஞ் சரிதை நூற்பொரு ளென்க. அடியார்கள் இப்புராணத்துள் நாயன்மா ரென்று வழங்கப் பெறுவர். 'நாயன்' என்னும் வடசொற்குப் பொருள் வழிகாட்டி அல்லது நடத்துவோன் என்பது; வடமொழியில் 'கோநாய', 'அசுவநாய’ முதலிய பிரயோகங்கள் இருத்தல் காண்க.

மேற்படி நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் 15
உக்தவேதீசுவரர் - சொன்னவாறறிவார்

திருத்துருத்தி யென்னுந் திருப்பதியிற் பெருமான் வடமொழிப் பெயர் உக்தவேதீசுவரர் என்பது தமிழின் அதற்கு நேர் 'சொன்னவா றறிவார்' என்பது.

மேற்படி நூல் : பக்கம் - 52
வியாச்சியம் - மன்றாட்டு வழக்கு

அதுவரை மாணவராயிருந்த மைனர் ஜமீன்தாரவர்களுக்கு தக்க பருவமாகிய வயது வந்தவுடனே அரசாங்கத்தார் ஜமீன் ஆட்சியை உரியவர்