பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

உவமைக்கவிஞர் சுரதா


வழங்குதலின் அது நோக்கி ஈண்டு வழித்துணைகியுள்ளார் என்றிடத்திற்கேற்பக் கூறினா ரென்பாருமுளர்.

நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 84
நியாயவாதி - வழக்கறிஞர்

முன் மேற்படிப்பு'யென்னும் 7-வது பிரிவில் கூறியபடி (பக்கம் 14) நமது நண்பர் சட்டப்பரீட்சையில் தேறி வழக்கறிஞர் நியாய வாதி) ஆன காலத்தில் ஜமீனைவிட்டுப் பிரிய நேரிடும் போலிருந்த சமயத்தில் ஆசிரியருக்கும் மாணவருக்குமுள்ள அன்பின் தகைமைக்கேற்ப இருவரும் பிரிந்தும் பிரியாதிருப்பதற்கு வேண்டியதற்குரிய ஏதுக்கள் திருவருளால் அமைந்துள்ளன என்பது இங்கு இப்பொழுது வெளியிடப்போகும் செய்திகளால் இனிது விளங்கும்.

நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 பக்கம்-78)
ராஜ சம்பிரதாயம் - அரசர் வழக்கு

'நிலைபெற்ற உலகின்க ணுண்டாக மந்திரிகள் வழக்கு மொழிந்தீர்களென்றான்' என்றும், நிலைபெற்ற உலகின்க ணுண்டாக மொழிந்தீர்கள், இங்ஙணம் மொழிவது மந்திரிகளுக்கு வழக்கமென்றான் என்றும் பொருள் கூறி மந்திரிகள் வழக்கு, என்றதனால் இஃது அரசர் வழக்கு அஃதாவது ராஜ சம்பிரதாயம் ஆகாதென்னுங் குறிப்புப் பொருளுங் கூறுப.

நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 94
நூலாசிரியர் : வா. மகாதேவ முதலியார்
Novel நாவல் - புதுக்கதை (1925)

தமிழிலே ஆங்கில நுண்ணூல்களை மொழிபெயர்க்கவும், வடமொழியிலும் பிறமொழியிலுமுள்ள அரிய நூல்களை மொழி பெயர்க்கவும், தமிழ்நாட்டில் பல இடங்களிலுமுள்ள பல்வகைக் கலைத்துறைகளுக்குரிய ஏடுகளி யாவற்றையுஞ் சேர்த்து அவற்றை ஒத்துப் பார்த்து அச்சியற்றவும், தமிழிலே புதுக்கதை (நாவல்)களாகப் பிழையோடு எழுதப்படுகின்ற புத்தகங்களைத் திருத்தஞ் செய்யவும், பிழை மிக்கனவற்றைக் கண்டித்து