பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

உவமைக்கவிஞர் சுரதா


பார்லிமெண்ட் - பாராளுமன்றம்

பாரதமாதாவின் திருத்தொண்டர்களுள் முதன்மையானவரும், தேச பக்தர்களுக்கெல்லாம் பெருங்குருவானவரும், நம் நாட்டுத் தலைவர்களுள் சிரோமணியென விளங்குபவருமாகிய ஸ்ரீமான் தாதாபாய் நெளரோஜி பாராளுமன்றத்தி (பார்லியமெண்டி)ற்கு ஒர் அபேட்சகராக நின்றார்.

நூல் : தேசபந்து விஜயம் (1925) பக்கம் - 11
நூலாசிரியர் : ம. க. ஜயராம் நாயுடு
Cartoon - விநோதப்படம்
இதழ் : ஒற்றுமை (1925) தொகுதி TV, சஞ்சிகை 2, பக்கம் : மேலட்டை
இதழாசிரியர் : மு. ஏ. வீரபாகு பிள்ளை, பி.ஏ., எல்.டி.,
சத்து - உள்பொருள் (1925)

சத்திலிருந்து ஒரு பொருள் தோன்றியதென்றால் அஃது அதனிடத்திருந்தே வந்ததென்றுதானே கொள்ள வேண்டும். இப்படி யொத்துக் கொண்டால் திரிபு என்பது பொய்யென்றுதான் ஏற்படும். அஃதாவது, ஒரு பொருள் மற்றொன்றாய் மாறுவதில்லை. உள்பொருள் (சத்து) எப்போதும் உள்பொருளே. ஆகவே நிலையானதும், ஒன்றின் பற்றுக்கோடற்றதும், திரிபற்றதுமாய பொருளொன்றே மெய்ப்பொருள்.

நூல் : ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் (1925) பக். 15, 16
நூலாசிரியர் : சோழ. கந்த சச்சிதானந்தனார்
Watch - மணிக்கூடு
Latrine - மலசலக்கூடம்
dash - கீறல்
Jfen - இணைமொழிக்குறி
நூல் : தற்கால தமிழ்ச் சொல்லகராதி (1925)
நூலாசிரியர் : திவான்பஹதூர் ச. பவானந்தம் பிள்ளை ஐ.எஸ்.ஒ. எப்.ஆர்.எச். எஸ். (லண்டன), எம்.ஆர்.ஏ.எஸ். (லண்டன்)