பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

91


சுயராஜ்யம் : உரிமை அரசாட்சி

1917ம் ஆண்டிற்கு முன்னரே பல ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள அரசியல் நிபுணர் அனைவரும் சுயராஜ்யம் அல்லது உரிமை அரசாட்சிக்காக மன்றாடி நின்றனர்.

நூல் : தேசபந்து விஜயம் (1925) பக்கம் - 29
நூலாசிரியர் : ம. க. ஜயராம் நாயுடு
Mayor - தலைவர்

அந்நாளில், கல்கத்தா நகரபரிபாலன (முனிசிபல்) சபையின் தேர்தலில் சுயராஜ்ய கட்சியினரே வெற்றி பெற்றனர். இதுகாறும் சட்ட சபையில் பக்கத்துணையின்றி அல்லலுற்ற சுயராஜ்ய கட்சியினர், இப்பொழுது கல்கத்தா நகரபரிபாலன சபையின் தேர்தலில் எல்லாம் சுயராஜ்யமயமே யாக்கினர். அவ்வாறு வெற்றி பெற்ற சுயராஜ்ய கட்சியினர், தேசபந்து சித்த ரஞ்சன தாசரையே அந்தச் சபையின் தலைவ (மேய)ராகத் தேர்ந்தெடுத்தனர்.

நூல் : தேசபந்து விஜயம் (1925) பக்கம் - 86
நூலாசிரியர் : ம. க. ஜயராம் நாயுடு
Skylights - வானவெளிச்சங்கள்

அந்த வீட்டின்மாடியில் நேர்த்தியான ஓர் அறை இருந்தது. அதில் சன்னல்களும் வானவெளிச்சங்களும் (Skylights) தேவையான மட்டும் அமைக்கப்பட்டிருந்த படியால் காற்றும் வெளிச்சமும் தட்டில்லாமல் வந்தன.

நூல் : நாகரீகப் போர் (1925) அதிகாரம் 2 - வீரனின் வியாகுலம், பக்கம் -9
நூலாசிரியர் : பாஸ்கர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்.எல்.டி.
Sky Scrapers – ஆகாயச் சுறண்டிகள்

அத்தேசத்தின் கட்டிடங்களோ, மஹோன்னதமானவை. அவைகளில் அனேகம் ஆகாயச் சுறண்டிகள் (Skyscrapers) என்ற பெருமையான பெயரைப் பெற்றவைகளாயிருந்தன. அதாவது, அவை கள் இருபத்தைந்து அல்லது முப்பது மெத்தைகள் வைத்துக் கட்டப்பட்டு, ஆகாயத்தையளாவி நின்றன.