உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

உவமைக்கவிஞர் சுரதா


Monkey Screw — குரங்குத் திருகு

விளக்கைப் பிரதாப்ஸிங்கிடம்கொடுத்துவிட்டுத் தன் இடுப்பிலிருந்து ஒர் நீண்ட கயிற்றைக் கழற்றினாள். அது சுமார் நீளமிருக்கும். அதன சுற்றளவு மிகவும் குறைவாதலால், அது அதிகக் கனமாயாவது அதிக இடத்தை யடைத்துக் கொண்டாவது இருக்கவில்லை. மெல்லிய கம்பிகளாற் செய்யப்பட்ட கயிறாகையால், அறுந்து போகாதபடி பலமாயிருந்தது. தயிற்றை நீட்டி வைத்துக்கொண்டு, தன் ஜோப்பிலிருந்து பெட்டி போன்ற ஒர் இயந்திரத்தை எடுத்துக் கயிற்றின் ஒரு நுனியை அதில் இசைத்தாள். மற்றொரு நுனியில் குரங்குத் திருகு போன்ற பற்களுடன் கூடிய சிறு பிடியொன்றிருந்தது.

இந்த நுனியைத் தவிர கயிற்றின் மற்றெல்லாப் பாகங்களையும் பெட்டிக்குள் அடங்கும்படி பெட்டியின் வெளியே இருந்த ஒரு பிடியைச் சுற்றி உள்ளே இழுத்தாள்.

மேற்படி நூல் : அதிகாரம் 16 - ஸந்நேகந் தெளிதல், பக்கம் - 213
அங்காத்தல் - வாய்திறத்தல் (1925)

திருக்குறள்

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவான் முதற்றே யுலகு

எழுத்துக்கள் அங்காத்தலை (வாய் திறத்தலை) முதற்காரணமாக வுடைமைபோல உலகம் முதல்வனை முதற்காரணமாக வுடையது.

நூல் : ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் (1925) பக்கம் 13
நூலாசிரியர் : சோழ கந்த சச்சிதானந்தனார்.
ஆங்கில மொழிச் சொற்கள்
சாக் - சீமைச் சுண்ணாம்பு
ஆப்ஜக்ட் லெஸன் - பொருட் பாடம்
காம்பஸ் - திசையறி கருவி
நூல் : நூல் தற்கால தமிழ்ச்சொல்லகராதி (1925)
நூலாசிரியர் : திவான்பஹதூர் ச. பவானந்தம் பிள்ளை