பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

97


பாட்டை சாரி - வழிப்போக்கர்

‘இனி என் காதலியிருந்தென்ன? இறந்தென்ன? இனி நான் முன்போலின்றித் துறவியானேன். ஆகையால், இனி நான் வீட்டுக்குள் இருந்தாலென்ன? வெளியிலிருந்தாலென்ன? என்று ஒரு பாட்டை சாரி (வழிப்போக்கன்) யோசித்துப் பார்த்துச் சொன்னான்.

நூல் : பர்த்ருஹரி சிங்கார சதகம் உரை (1925) 5-வது அதிகாரம், போலித் துறவு, பக்கம். 31
தெளிபொருள் விளக்க உரை : தமிழ்ப் பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை
Sofa - சாய்மான மஞ்சம்

நேர்த்தியான மூங்கிற்பாயொன்று தரையில் விரித்திருந்தது. அதன் மேல் கித்தான் நாற்காலி ஓரிடத்திலும், சாய்மான மஞ்சம் (Sofa) மற்றோரிடத்திலும் வைக்கப்பட்டிருந்தன.

நூல் : நாகரீகப் போர் (1925)
அதிகாரம் 2 - வீரனின் வியாகுலம், பக்கம்-9
நூலாசிரியர் : பாஸ்கர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.
Balcony - உயர்நிலைப்படி

கொட்டகையையடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் - அல்லது சுமார் ஏழு ரூபா - கொடுத்தால் எல்லாவற்றிலும் உயர்ந்ததான பாக்ஸ் (Box) அல்லது பெட்டி என்ற ஆஸனம் கிடைக்குமென்று இங்குள்ளவர்கள் சொன்னார்கள். பணப்பையைத்திறந்து பார்த்தான். அதில் ஐந்து டாலர்களிருந்தன. அவன்மனம் ஷோக்கில் நிலைத்திருந்தபடியால் பெட்டி டிக்கெட்டையே வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உயர்நிலைப் (Balcony) படியேறி, ஒரு பாக்ஸில் போய் உட்கார்ந்தான்.

நூல் : நாகரீகப் போர் (1925)
அதிகாரம் : 4- மாயா மித்திரம், பக்கம் - 38
நூலாசிரியர் : பாஸ்கர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.