தமிழ்த் தாத்தா
21
பற்றிப் புகழ்ந்து தமக்கு ஒரு பாட்டு எழுதித் தரும்படி பிள்ளையிடம் கேட்டார். பிள்ளையவர்கள் எழுதித் தந்தார். பின்னர் அதுபோலப் பலர் ஒருவர் பின் ஒருவராக வர, ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார். அவர்கள் அந்தப் பாடல்களைத் தாமே எழுதியதாகத் தேசிகரிடம் போய்ச் சொல்லிப் பரிசு பெற்றார்கள். மறு நாள் தேசிகரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திக்கும்போது, "இரவு எல்லாம் பிள்ளையவர்களுக்கு மிகவும் வேலை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது" என்று தேசிகர் குறிப்பாகச் சொன்னார்.
பிள்ளையவர்கள் மாயூரம் போய்ச் சேர்ந்தபின் ஆசிரியரும் அங்கே சென்றார். அங்கிருந்து மறுபடியும் பிள்ளை திருவாவடுதுறைக்குப் புறப்பட்டபோது ஆசிரியரும் உடன் சென்றார். திருவாவடுதுறைக்கு வண்டியில் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். போகும்போது பிள்ளை அம்பர்ப்புராணத்தை பாட ஆரம்பித்தார். வண்டியின் ஓட்டத்திலேயே கவிதையின் ஓட்டமும் தொடர்ந்து வந்தது. வண்டி போய்க்கொண்டிருக்கையில் ஏட்டுச் சுவடியில் அந்தப் பாடல்களை என் ஆசிரியர் எழுதிக்கொண்டே போனார், அம்பர்ப்புராணத்தில் "நந்தன் வழிபடு படலம்" என்பதில் முன்பு 53 பாடல்களே பாடப்பெற்றிருந்தன, நந்தன் பயணத்தைப் பற்றிய செய்திகளே, இவர்களது வண்டிப்பயணத்தில் பாடப்பெற்று ஆசிரியரால் எழுதப்பெற்றன.
திருவாவடுதுறையில் இரண்டு வகையான பாடங்களை ஆரம்பிக்க ஏற்பாடாயிற்று. முதியவர்களுக்குச் சில நூல்களையும், இளையவர்களுக்குச் சில நூல்களையும் பாடம் சொல்வது எனத் திட்டம் செய்தார்கள். ஆசிரியரை எந்தக் கட்சியில் சேர்ப்பது என்ற எண்ணம் வந்தது. இவரைக் கேட்டபோது இரண்டு வகையான பாடமும் கேட்பதாக இவர் சொன்னார். அவ்வாறே இரண்டு வகுப்புக்கும் என்ன என்ன பாடங்கள் நடந்தனவோ அவற்றையெல்லாம் இவரும் கேட்டு வந்தார். பாடம் நடக்கும்போது பாடல்களை இசையுடன் படிக்கின்ற வேலையை இவர் செய்து வந்தார்.
பிள்ளையவர்களின் அன்பு
ஒரு முறை ஏதோ சிறிய மன வேறுபாட்டால், பிள்ளை, ஆசிரியரிடம் பேசாமல் இருந்தார். ஒரு நாள் இரவு மடத்தில் பந்தி நடந்தது. யாவரும் உண்ணும் அந்தப் பந்தியில் பிள்ளையும் அமர்ந்து இருந்தார். இடையில் யாரும் எழும் பழக்கம் இல்லை. அன்று எல்லோரும் எழுவதற்கு முன் பிள்ளை எழுந்து வெளியில் வந்தார். விளக்கு இல்லாத ஒரு திண்ணையில் படுத்திருந்த