பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழ்த் தாத்தா

நிலையில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் பணியை மேற்கொண்டார்.

அந்த வேலையில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபால் ராவ் அடிக்கடி ஆசிரியர் நடத்தும் வகுப்புகளுக்கு வந்து இவர் பாடம் சொல்வதைக் கவனித்துச் செல்வார். மாணவர்களுடைய கவனத்தை ஈர்க்கும்படியாக, அவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படியாக, ஆசிரியப் பெருமான் பாடம் சொல்வதைக் கேட்டுத் திருப்தி அடைவார்.

கும்பகோணத்திலிருந்து ஆசிரியப் பெருமான் அடிக்கடி திருவாவடுதுறை. சென்று தம்முடைய அநுபவத்தை எல்லாம் தேசிகரிடம் சொல்வார். அதனால் சுப்பிரமணிய தேசிகருக்கும் திருப்தி உண்டாயிற்று.

கல்லூரி வேலையில் சேர்ந்த சில மாதங்களுக்கு எல்லாம் ஆசிரியப் பெருமானுக்கு ஒரு புதல்வர் பிறந்தார். அவருக்குக் கலியாண சுந்தரம் என்ற திருநாமத்தை வைத்தார்கள். திரு நல்லூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட பிரார்த்தனையின்மேல் பிறந்தமையால் குழந்தைக்கு அந்தத் திருநாமத்தை வைத்தார்கள்.

சீவக சிந்தாமணிப் பதிப்பு

சேலம் இராமசாமி முதலியார் என்பவர் கும்பகோணத்திற்கு முன்சீப்பாக உத்தியோகம் பெற்றுவந்தார். அவர் தமிழிலும், வடமொழியிலும், இசையிலும் பழக்கம் உள்ளவர். திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த சுப்பிரமணிய தேசிகர், அவரைப் போய்ப் பார்த்து வரும்படியாக ஆசிரியப் பெருமானுக்குச் சொல்லி அனுப்பினார். 21-10-1980இல் ஆசிரியர் அவரைப் போய்ப் பார்த்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதையும், பின்பு தேசிகரிடம் பாடம் கேட்டதையும் இவர் எடுத்துச் சொன்னார். என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?' என்று கேட்டபோது தாம் படித்த அந்தாதிகள், பிள்ளைத் தமிழ்கள், கோவைகள் முதலியவற்றை வரிசையாக ஒப்புவித்தார். அதைக் கேட்ட இராமசாமி முதலியார், இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம்? என்று சொன்னார். அவ்வளவு அலட்சியமாக அவர் பேசியதைக் கண்டு ஆசிரியப் பிரான் ஆச்சரியமுற்றார், மேலும் தாம் படித்த நூல்களை எல்லாம் சொன்னார். கம்பராமாயணத்தைப் படித்ததையும் சொன்னார். இவை எல்லாம்