தமிழ்த் தாத்தா
35
சங்கத்தை உண்டாக்கிப் பல நூல்களை வெளியிட்டார். அதோடு 'செந்தமிழ்’ என்ற இலக்கியப் பத்திரிகையையும் வெளியிட்டு
வந்தார். அவருடைய தாயார் 1898-ஆம் ஆண்டு இறைவன் திருவடியை அடைந்தார். அது காரணமாக இராமநாதபுரம் சென்று துக்கம் விசாரித்து வரவேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அப்போது இராமநாதபுரத்திற்குப் புகைவண்டி இல்லை; மதுரைபோய் அங்கிருந்து வண்டி வைத்துக்கொண்டு போகவேண்டும்.
ஆசிரியரும், அவருடைய குமாரரும் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்து அங்குள்ள திருவாவடுதுறை மடத்தில் தாங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டுப் பரமக்குடி போனார்கள். வைகையில் வெள்ளம் வந்த காரணத்தினால் 3 நாள் அங்கேயே தங்கவேண்டி வந்தது. பின்னர்தான் இராமநாதபுரம் போய்ச் சேர முடிந்தது.
இராமநாதபுரத்தில் பாண்டித்துரைத் தேவர் தங்கியிருந்த அரண்மனைக்குச் சோமசுந்தர விலாசம் என்று பெயர். ஆசிரியர் அங்கே ஒரு மாத காலம் தங்கியிருந்தார். காலையிலும், மாலையிலும் ஆசிரியர் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து உரையாடினார்.ߵߵஎன்னுடைய தாயார் இறந்துபோன துக்கத்தைச் சம்பிரதாயமாக விசாரிக்க வந்தீர்கள். உங்களோடு சல்லாபம் செய்துகொண்டிருப்பதில் என் அன்னை இறந்துபோன துக்கமே மாறிவிட்டது. என்னுடைய தாயார் மிகச் சிறந்தவர். அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் எனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தார்கள். இறந்த பிறகும் உங்களை எல்லாம் வரும்படி செய்து எனக்குத் தமிழின்பம் உண்டாகச் செய்தார்கள்’’ என்று அவர் நயமாகப் பேசினார்.
ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் அரசராகிய பாஸ்கர சேது பதியைப் பார்க்கப் போனார், அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் புறப்படும்போது சேதுபதி ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லவேண்டுமென்று அவரிடம் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.ߵߵஅது மிகவும் பொருத்தம்ߴߴ என்று பாண்டித்துரைத் தேவர் சொல்லிவிட்டு, ஆசிரியர் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். ஆசிரியர் அவரை வரவேற்று உட்காரச் செய்தார்.ߵߵஉங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைச் சொல்ல வந்திருக்கிறேன்ߴߴ என்று பாண்டித்துரைத் தேவர் சொன்னவுடன், ߵߵஏதாவது புதிய நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று சொல்லப் போகிறீர்களா?ߴߴஎன்று கேட்டார் இவர்.
ߵߵஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார்’ என்றார்