பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழ்த் தாத்தா

மகோபாத்தியாயப் பட்டம் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி இன்னமும் உங்களுக்குத் தெரியாதா?’ என்றார். ஆசிரியருக்கு அந்தச் செய்தி அப்போதுதான் தெரிந்தது. -

அதுமுதல் தமிழ்நாட்டிலுள்ள பலர் ஆசிரியரைப் பாராட்டினர். கடிதங்கள் மூலம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர், 'மகாமகோபாத்தியாயப் பட்டம் தங்களுக்கு வழங்கப்பட்டதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு அது கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்' என்று ஒரு கடிதம் அனுப்பினார். அதுவரை வடமொழிப் புலவர்களுக்கே அளிக்கப் பெற்று வந்த அந்தப் பட்டம், ஆசிரியப் பெருமானுக்கு முதல் முறையாக வழங்கப்பெற்றதனால் அரசினருக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று.


தோடாப் பெறுதல்

1906-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரும், அவருடைய தேவியாரும் சென்னைக்கு விஜயம் செய்தார்கள். அப்போது சென்னை நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. வெளியூர்களிலிருந்து ஜமீன்தார்களும், பிரபுக்களும் வந்திருந்தார்கள். ஆளுநர் மாளிகையில் தர்பார் ஒன்று நடந்தது. அதற்கு முன்பு சென்னை நகரில் இந்தியர்கள் வசித்து வந்த பகுதியை “ப்ளாக் டவுன்” என்று ஆங்கிலேயர்கள் வழங்கி வந்தார்கள். அது பலருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டிருந்தது. ஜார்ஜ் இளவரசர் வந்ததையொட்டி அதன் பெயரை “ஜார்ஜ் டவுன்" என்று மாற்றி வழங்கலாயினர். -

அப்போது அறிஞர் பெருமக்களுக்குப் பலவகையான பட்டங்களும், சன்மானமும் அளிக்கப்பெற்றன. ஆசிரியப் பெருமானுக்குத் தங்கத் தோடா அணி வித்து மதிப்புச் செய்தனர்.


பாரதியார் பாடல்

1906-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியப் பெருமான் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார். அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இந்த விழாவுக்கு வந்திருந்த அவர் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அங்கேயே ஒரு தாளில் அந்த