பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

61



தக்கயாகப் பரணி

1930-ஆம் ஆண்டு தக்கயாகப் பரணி அச்சிட்டு வெளிவந்தது. அதில் பலவகையான ஆராய்ச்சிகளை அமைத்திருந்தார். ஒரு சிறிய நூலுக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா என்று பலரும் வியந்தார்கள்.


பிள்ளையவர்கள் சரித்திரம்

1930-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் மாடியில் படுத்திருந்த ஆசிரியர் எழுந்திருந்து கீழே இறங்கி வந்தார். வரும் போது. கீழே இருந்த கதவு தடுக்கி விழுந்துவிட்டார். காலில் நன்றாக அடிபட்டு வீங்கிவிட்டது. அவரது வீட்டிற்கு அருகில் இருந்த டாக்டர் வந்து பார்த்தார். குணமாகவில்லை. பிறகு மிகச் சிறந்த டாக்டராகிய ரங்காசாரியாரை அழைத்து வந்தார்கள். அவர் ஆசிரியருக்கு வீட்டிலேயே ரண சிகிச்சை செய்தார். ஆசிரியர் சில நாட்கள் படுக்கையில் இருக்கும்படியாக நேர்ந்தது. அப்போது அவர் எதையும் படிக்கக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் ஆசிரியப் பெருமானுக்கு தமிழ்ப் பாட்டுக் காதில் விழாவிட்டால் மூச்சே நின்றுவிடும். நான் அவர் அருகிலேயே அப்போது இருந்து வந்தேன். ஆசிரியப் பெருமானுடைய புத்திரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலையாக இருந்தார். அவர் ஹைகோர்ட்டிற்குப் போன பிறகு ஏதாவது புத்தகத்தை எடுத்து என்னைப் படிக்கச் சொல்வார் ஆசிரியர். இவருடைய சிந்தனை பிள்ளையவர்களுடைய வரலாற்றை முடித்துவிட வேண்டும் என்பதில் இருந்தது. பல விதமான குறிப்புகளைப் பல காலமாகச் சேர்த்திருந்தார். முன் பகுதிகளை எழுதிவிட்டார். கடைசிப் பகுதி எஞ்சியிருந்தது. படுத்த படுக்கையாய் இருந்த போது இவருக்குப் பிள்ளையவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிப்பதற்குள் தம் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்கிற அச்சம் இருந்தது.

ஒருநாள், அந்தக் கட்டை எடுத்துக்கொண்டு வா" என்று என்னிடம் சொன்னார். "டாக்டர் எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறாரே" என்றேன் நான். "டாக்டருக்கு என்ன தெரியும்? என் கடமையை நான் செய்தால் ஆண்டவன் என்னைக் காப்பாற்றுவான்" என்றார். அந்தக் கட்டை எடுத்து வந்தேன். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் இறுதிக் காலத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டார். கண்ணீர் விட்டுக்கொண்டே அந்தப் பகுதியை இவர் சொல்லச் சொல்ல நானும் கண்ணீர்விட்டுக் கொண்டே அந்தப் பகுதியை எழுதி வந்தேன். பிள்ளையின் வர