பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைநடை

77

களைக் கூறுகின்றாரென்று தோன்றுமே ஒழியப் புதிய செய்யுட்களை யோசித்துச் சொல்லி வருகிறார் என்று தோன்றாது. மிகவும் அரிய கற்பனைகளை மனத்திலே ஒழுங்கு பண்ணிச் சில நிமிஷ நேரங்களில் சொல்லிவிடுவார். நூல்களுக்கு இடையிடையே அமைந்த எதுகைக் கட்டுள்ள பாடல்களை இளைப்பாற்றுப் பாடல்கள் என்பார்.’

மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது, நாமும் அவருடனே இருந்து எல்லாவற்றையும் கவனிப்பதான பிரமை தோற்றும்.

ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். ஒருமுறை திருநெல்வேலிப் பக்கம் ஏடு தேடச் சென்றிருந்தார். இரவு நேரம். நிலவு காய்ந்துகொண்டிருந்தது. ஒருவர் ஒர் ஏட்டுச் சுவடியைக் கொண்டுவந்து ஐயரிடம் தந்தார். அந்த நிலவொளியில் அதைப் பிரித்துப் பார்த்தார். அது பத்துப்பாட்டு என்னும் சங்க நூல் தொகுதி எழுதியிருந்த சுவடி. அந்தப் பத்துப்பாடல்களில் முல்லைப்பாட்டு என்பது ஒன்று. நிலவில் சுவடியைப் பிரித்துப் பார்த்தபோது ‘முல்லைப் பாட்டு’க் கண்ணில் பட்டது. அதைப்பற்றி எழுதும்போது ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்று தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினர். எவ்வளவு பொருத்தமான தலைப்பு!

பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் இரண்டு மகளிர் பல மலர்களைப் பறித்துப் பாறைமேல் குவித்தனர் என்ற செய்தி வருகிறது. அந்த மலர்களின் பெயர்களைக் குறிஞ்சிப்பாட்டுச் சொல்கிறது. மொத்தம் 99 மலர்கள் வருகின்றன. ஐயர் தம்மிடம் கிடைத்த ஒரு சுவடியைப் பார்த்தபோது அந்த மலர் வரிசையில் சில குறைந்திருப்பதைக் கண்டார், பிறகு தருமபுர ஆதீனத்தில் கிடைத்த ஒரு பிரதியில் அந்த மலர்களின் பெயர்கள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அதைப்பற்றி எழுதிய கட்டுரைக்கு, ‘உதிர்ந்த மலர்கள்’ என்று பெயரிட்டார். இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம்.

தெளிவான நடையில் எல்லோருக்கும் விளங்கும் சொற்களைப் பெய்து, உயிரோவியத்தைப்போலத் தாம் கூறுவதை எழுதும் ஆற்றல் ஐயருக்கு இருந்தது. சிறிய வகுப்பில் படிக்கும் பிள்ளை முதல் பெரும் புலவர் வரையில் அவருடைய கட்டுரைகளைப் படித்து மகிழலாம். அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி அவற்றின் சுவையை உணரலாம.

இவர் தம்முடைய சரித்திரத்தை ‘ஆனந்த விகட’னில் எழுதி வந்தார். துரதிர்ஷ்டவசமாக அதை முற்றும் எழுதி முடிப்பதற்குள் இவர் மறைந்தார். அது முற்றுப் பெராமல் இருந்தாலும் அது