பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உடன் எடுப்பு

ஞாலம் எல்லாம் புகழ் நந்தமிழ் அன்னை

ஓலமிட் டேயழ ஊமையாய் மன்னி

(காலம்)
அடிகள்

உண்ணும் உணவுமே உடுக்கும் உடையுமே,

நண்ணுசிற் றின்பமுமே நாடி உழன்றே,

இன்ன பிறவேபேர் இன்பமா கக்கருதித்

தன்னலம் ஒன்றையே தாவிச் சுழன்றே

(காலம்)

சிலப்பதி காரமாம் செந்தே னினையும்

அளப்பில் குறளாம் அமிழ்தந் தனையும்

கலப்பில் சங்கநூற் கனிச்சாற் றினையும்

சுளிப்பா யுண்ணாது காஞ்சிரங் காய்நாடி

(காலம்)

அழியாச் சுவையினை அளிப்பதும் உணவன்று,

அழியா அழகினை அளிப்பதும் உடையன்று,

அழியா நல்லின்பம் அளிப்பதும் காமமன்று,

அழியாத் தமிழே! அதை நுக ராதுநின்று

(காலம்)
8. புலவரைப் போற்றிடுவீர்!
எடுப்பு
புலவரைப் போற்றிடுவீர்!
புகழுறு நந்தமிழ்ப்
(புல)
உடன் எடுப்பு
நிலவரை யதனில் நிலைத்துநிற் பதுதான்
புலவர்தம் புகழே புகல்கின் றேன் நான்
(புல)
அடிகள்
தொல்காப் பியரின்று தோன்று கின்றார்.
ஒல்கா வள்ளுவர் உயர்ந்திடு கின்றார்
(புல)

9