பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இளங்கோ வடிகள் விளங்கு கின்றார்
துளங்காக் கம்பரும் துலங்கு கின்றார்
(புல)
சேக்கிழார் இன்று சிறப்புறு கின்றார்
சீர்க்கவி பாரதி - செழித்திடு கின்றார்
(புல)
பொன்விளை நாடும் புலவர் இலாவிடின்
கண்ணில் குருடரின் கலங்குவ தாமே
(புல)


9. எடுத்துரைப்பாய்!


எடுப்பு
எடுத்துரைப்பாய் அவர்க்கே - இளங்கிளியே!
இனியாகிலும் தமிழ் கற்பீர் என்று
(எடு)
உடன் எடுப்பு

அடுத்த பிறமொழியே ஆதரிக்கின் றார்சிலர்

தடுத்துத் தமிழ் மொழியைத் தாழ்த்துகின் றார்சிலர்

(எ)
அடிகள்

ஆரியம் வந்ததும் அதைமிகத் துதித்தார்,

நேரிய ஆங்கிலம் நெஞ்சினில் பதித்தார்,

ஆரிய இந்தியாம் ஆற்றினில் குதித்தார்,

சீரிய அன்னையாம் செந்தமிழ் மிதித்தார்

(எ)

அயல்மொழிகள் படித்தால் அவற்றிலே யேவீழ்ந்து

மயல்மிகக் கொள்ளாமல் மாதமி ழிலும் ஆழ்ந்து

கயல்விழி யாரையும் கற்கச்செய் தேவாழ்ந்து

அயல்மொழிக் கலைகளை அமைப்பீர் தமிழிலென்றே

(எ)
10