பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஒன்பதாவது வெளியீடு! இரண்டாவது பதிப்பு!!


எங்கள் உரை:

"தமிழ்த் திருநாள்" அல்லது "பொங்கற் புது வாழ்த்து" என்னும் இந்நூலை, எங்கள் பொங்கல் வாழ்த்து வெளியீடாக வெளியிடுகின்றோம். இந்நூற் பாடல்களை ஏற்புடைய எந்த இசையில் வேண்டுமானாலும் பாடலாம். மேலும், இந்தூல், பொங்கல் வாழ்த்தாக நண்பர்கட்கு அன்பளிப்புச் செய்தற்கு உரியதாகும். வாளா வாழ்த்துவதைக் காட்டிலும், வாழும் வகையை நினைவு செய்து வாழ்த்துவது நல்லதல்லவா?

இந்நூற்குப் பேராதரவு நல்குமாறு அன்பர்களை வேண்டுகிறோம். அன்பளிப்புச் செய்பவர்கள், கீழ்க் கண் கட்டத்தை நிறைவு செய்து வழங்கலாம்.

இங்ஙனம்,
சிங்கார குமரேசன்
சுந்தர-சண்முகன்

பைந்தமிழ்ப் பதிப்பகம்
புதுச்சேரி, 20-12-48.


"எங்கள் நன்றியும் எங்கள் வணக்கமும்,
பொங்கல் வாழ்த்துடன் புரிகின் றோமே"


உயர்திரு........................................................... அவர்கட்கு,

இந்நூலைத் தமிழ்த் திருநாளாம் பொங்கற் புது நாள் வாழ்த்தாக அன்புடன் அளிக்கின்றேன்.

இங்ஙனம், அன்புள்ள
.............................................
(வழங்குவோர் பெயர்)


இடம்......
நாள்..........