பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ்த் திரு நாள்

அல்லது

பொங்கற் புது வாழ்த்து.
தமிழ்த்தாய் வணக்கம்.

பொங்கற் புதுமலர் பொன்னடி சூட்டினேன்
தங்கு தமிழ்த் திருநாள் தன்னில்
மங்கலம் பெருக மகிழ்தமிழ்த் தாய்க்கே.

1. பொங்குக பாலே! பொங்குக பாலே!
எடுப்பு

பொங்குக பாலே! பொங்குக பாலே!

எங்கும் மங்களம் தங்கிப் பொலிய

(பொங்குக)
உடன் எடுப்பு

செங்கை வளையலாம் சங்கு முழங்க

மங்கையர் சர்க்கரைப் பொங்கல் வழங்க

(பொங்குக)
அடிகள்

கன்னியர் மொழிபோல் கரும்பு செழிக்கப்

பண்ணிய நெற்பயிர் பாரெலாம் கொழிக்க

வண்ணக் காளைகள் வண்பசு வளமுற

நன்னீர் பெருகியே நாடு நலமுற

(பொங்குக)
4