பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


போரினை நாட்டினில் புரியும் அரக்கர்
கேரிய மனிதராய் நிலைத்துத் திருந்த
ஊரில் எல்லோரும் உடன்பிறந் தோரென

ஊறிய ஒற்றுமை ஊற்றினே அருந்த
(பொங்குக)கல்வியாம் கதிரவன் கலைபெற்றுக் காய
கல்லா மடமையாம் காரிருள் மாய
பல்வகைத் துன்பமாம் பனித்துளி வீய

நல்வகை இன்பமாம் நல்லொளி தோய
(பொங்குக)
2. கொண்டாடுவோம்!
எடுப்பு


கொண்டாடுவோம்-நாம்-கொண்டாடுவோம்
குலவி மகிழ்ங் தே
(கொண்டா)


உடன் எடுப்பு


திண்டோள் மலேயெனத் திரண்டு நீளத்
தண்டா வளமுறத் தமிழ்த்திரு நாளே
(கொண்டா)


அடிகள்

தமிழ்ப்புத் தாண்டாம் தையினைப் போற்றித்
தைதோம் தையத்தோம் தைதோ மெனச் சாற்றி
அமிழ்தாம் பால்தரும் ஆவினம் காப் பாற்றி

ஆதர விலோர்க்கே அருங் கொடை யாற்றி
(கொண்டா)குழல்மொழி யாருடன் குலவித் தளிர்த்து
மழலை மொழியும் மைந்தரை அளித்து
எழிலுறு வீட்டினில் இன்பத்தில் குளித்துப்

பொழிலில் அன்றிலின் பூரித்துக் களித்து
(கொண்டா)பல்வித மக்களும் பரந்து கூடியே
கல்வி நிறைந்த கழகங்கள் நாடியே
இலக்கியச் சோலையில் மயில்போல் ஆடியே

இன்பக் கவிகளைக் குயில்போல் பாடியே
(கொண்டா)
5