பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6. தமிழின் பெருமை.


எடுப்பு

தமிழின் பெருமை நீ - தான் அறிவாயோ
தமிழ்போல் இனிக்கும் தண்மாங் குயிலே
(தமிழின்)

உடன் எடுப்பு


அமிழ்தினும் இனியது அருந்தி மகிழவே,
அஞ்செவி நிறைவது கெஞ்சம் நெகிழவே
(தமிழின்)

அடிகள்

முன்னே தோன்றி, மொழிபல வழங்கிற்று,
தன்னே ரொத்துத் தனித்து முழங்கிற்று
(தமிழின்)

தெய்வஙந் தனைப்பின்னே திரியவைத்தது,
உய்வழி கற்றோர்க்கு உறச்செய் வித்தது
(தமிழின்)

முன்னமோர் புலவற்கு முரசு கட்டிலில்
மன்னன் விசிறியே மகிழ விட்டது
(தமிழின்)

ஆரியம் போல் வழக்(கு) அழிந்து மறையாது,
கேரிய புகழுடன் நின்று குறையாது
(தமிழின்)

எண்ணியவர்க்கருள் இறைவனைப் போல
நண்ணி வளர்ப்பவர்க்கு கலந்தரும் சால
(தமிழின்)7. காலங் கழிப்பீரோ?


எடுப்பு


காலங் கழிப்பீரோ-இனியும்
கன்னித் தமிழைக் கற்றுக் களிக்காமல்
(காலம்)

8