பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


காப்புக் கட்டுதல்: ஒரு தட்டிலே மஞ்சள் கலந்த அரிசியைப் பரப்பிவைத்து அதன் மீது மஞ்சள் குங்கு மங்களால் அலங்கரிக்கப்பட்ட தேங்காயை வைத்து அந்தத் தட்டினை மணமகனுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் முக்காலியின் மேல் வைத்தல் வேண்டும். மணமகன் வலக்கையினை அந்தத் தேங்காயின்மீது வைத்தபடி இருக்க முழுமஞ்சள் கட்டப்பெற்ற நூல்கயிற்றினை மணமகன் கையில் கட்டுதல் வேண்டும். அதன் பின்னர் மணமகள் தன் இடக்கையை அந்தத் தேங்காயின்மேல் வைக்க மணமகன் மஞ்சள் கட்டிய நூலினை மணமகள் கையில் கட்டுதல் வேண்டும். அதேசமயத்தில் அவர்களுக்கு எதிர்ப்புறத்தில் நடப்பெற்றுள்ள அரச மரக்கிகளைக்கும் மஞ்சள் நூல்கயிறு ஒன்று கட்டுதல் வேண்டும்.

காப்புக்களைதல்

திருமணம் முடிந்தபின்னர்க் காப்புக்கட்டிய அதே முறையில் மணமகன் மஞ்சள் பூசிய தேங்காயின் மேல் கையைவைக்கச் செய்து முன் புகட்டிய மஞ்சள் நூல் கயிற்றினை அவிழ்த்திடச் செய்தல் வேண்டும் அந்த நேரத்திலேயே அரசங்கிளையில் கட்டிய மஞ்சள் கயிற்றினையும் அவிழ்த்து விடுதல் வேண்டும். இந்நிகழ்ச்சிகளின்போது தும்மல், இருமல் முதலியன கேளாமல் இருத்தற் பொருட்டு மேளம் கொட்டுதல் வழக்கம்.

பந்தற்கால் நடுதல்

தமிழ்த் திருமணம் செய்துகொள்பவர்கள் இந்தச் சடங்கைச் செய்வதற்கு ஆசிரியர் உதவியை நாடவேண்டியதில்லை மங்கல மகளிர் ஐவர் ஒன்று கூடிப் பந்தற்கால்களுள் வட கிழக்கு மூலையில் நடவேண்டிய ஒன்றுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு மலர் சூடி மேளதாள முழக்கத்துடன் தங்கள் கைகளால் அந்தக் கம்பத்தைக் குழியில் நடலாம். ஆசிரியரும் உடனிருந்து நிகழ்த்த வேண்டுமென்று விரும்பினால் ஆசிரியரையும் வைத்துக் கொள்ளலாம். ஆசிரியர் இறைவழிபாடு செய்து மஞ்சள் கலந்த அரிசியைப் பரப்பிய தலை வாழையிலையின்மீது கலசம் நிறுத்தி, அந்தக் கலசத்திற்கு