பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

யோடு வாழ்வேன் என்பது உறுதி. எங்கள் இல்லற வாழ்வு பெற்றாேரும் பெரியோரும் புகழும் வகையில் இனிது நடைபெற வேண்டுமென்று எங்கும் நிறைந்த இறைவனை இறைஞ்சுகின்றேன்.

மணமகள் உறுதிமொழி கூறுதல்

இங்குக் குழுமியுள்ள பெரியோர்கள் அனைவர்க்கும் வணக்கம். உங்கள் முன்னிலையில் இந் நம்பியை என் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொள்ளப் பெருமகிழ்ச்சியுடன் இசைகின்றேன். என் கணவர் கருத்தறிந்து ஒழுகி இல்வாழ்க்கைக்கு உற்ற துணையாகத் திகழ்வேன். இன்பத்திலும் இன்னலிலும் இணைபிரியாது என் கணவரை மதித்து அவர் இன்பமே என் இன்பம்; அவர் நலமே என் நலம் எனக்கருதி வாழ்வேன் என்று உறுதி கூறுகின்றேன். தமிழ் மறையாம் திருக்குறள் கூறும் இல்லற நெறியில் என் கணவருடன் அன்புடன் இணைந்து வாழ்வேன் என்பது உறுதி. எங்கள் மனையற வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கச் சிறப்புடன் விளங்க அருள்புரியுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.


11. மங்கல நாண் அணிதல்

1. மணமகனின் உடன் பிறந்தாள் ஒரு தட்டில் திருவிளக்கேற்றி அதனை மணமகளின் பின்புறம் ஏந்தி நிற்றல் வேண்டும்.

2. ஆசிரியர் மங்கல நாணை மணமகன் கையில் கொடுத்தல்.

3. மணமகன் தன் வலக்கை மணமகளின் கழுத்திற்குப் பின்புறமாக அவனது வலப்பக்கம் வரும்படிவளத்து, மற்றாெருகை இடப்புறத்தில் இருக்க, மங்கல நாணின் இரு புறங்களையும் பற்றித் தாலியின் முகப்பின் முன்புறம் மார்பின் நடுவே விளங்க, கழுத்தில் கட்டி மூன்று முடியிடுதல்