உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

செய்து வைப்பது வழக்கம். அத்திருமணமும் மிகச் சுருங்கிய முறையில் சிக்கனமாகவே நடைபெறும். அன்பினால் பிணைக்கப்பட்ட மணமக்கள் இருவரும் இல்லறமென்னும் நல்லறம் ஏற்று வாழ்க்கை தொடங்குகிறார்கள் என்பதை அறிவிக்கவே மணச் சடங்குகள் நடைபெற்றன

சான்றோர்கள் வகுத்த அம்முறைகளைப் பின் பற்றிப் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் ஆயிரக் கணக்கான திருமணங்களை நடத்தி நல்வழி காட்டியுள்ளார். அம் முறைகளை அனைவரும் அறிந்து பிறர் உதவியின்றித் தாங்களே திருமணங்களை நடத்தத் துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நூலை வெளியிட விரும்பினோம்.

இந்நூலைச் செம்மையான முறையில் அச்சிடப் பேருதவியாக இருந்த புலவர்கள் திரு. த. இராமலிங்கம், தணிகை உலகநாதன் ஆகியோருக்கு மன்றத்தின் நன்றி என்றும் உரியது.

வாழ்க மணமக்கள் !

இங்ஙணம்,

கோ. வில்வபதி,

தலைவர்,

மாணவர் மன்றம், சென்னை- 1