பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

103


டுள்ளவன் இச்சோழனே என்பது சிலர் எண்ணம். தந்தையிழந்த கங்கபாடி, வேங்கி ஆகியவற்றினின்று விக்கிரமன் தன்காலத்தில் சிற்சில பகுதிகளை மீட்டினான். தில்லைக் கூத்தனுக்கு இச்சோழன் பற்பல திருப்பணிகள் செய்தான். இவன் கி. பி. 1118-இலிருந்து 1135 வரை நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின்பு ஆண்டவன் இரண்டாம் குலோத்துங்கனாவான். இவன்காலம் 1135-1150. தமிழ் இலக்கியங்களிலே இவன் குமாரகுலோத்துங்கன் என அழைக்கப்படுகிறான். இவன்றன் அவையிலேதான் கம்பரும் ஒட்டக்கூத்தரும் வீற்றிருந்தனர். இம்மன்னனுக்குப் பின்னர் இரண்டாம் இராசராசனும் இரண்டாம் இராசாதிராசனும் கி. பி. 1178 வரை ஆண்டனர்.

கி. பி. 1160-1117 என்ற இடைக்காலத்திலே பாண்டிய நாட்டிலே உள்நாட்டுப் போர் உண்டாயிற்று. பாண்டிய நாட்டு அரசுரிமை பற்றிப் பராக்கிரமன், குலசேகரன் என்ற இரு பாண்டிய மன்னர்கட்குள் தகராறு கிளம்பிற்று. சோழரும், இலங்கை அரசரும் இதில் தலையிட்டனர். ஈழ மன்னனான இலங்காபுரன் குலசேகரனை ஆதரித்தான். சோழன் பராக்கிரமனை ஆதரித்தான். இலங்காபுரன் சோழ நாட்டு மீது படையெடுத்துச் சென்றான். குலசேகரனைப் பாண்டிய நாட்டு அரசனாக்கினான். மூன்றாம் குலோத்துங்கன், ஈழ மன்னன், சேரன், பாண்டியன் ஆகிய மூவரோடும் போரிட்டான். சுந்தரபாண்டிய மாறவர்மன் சோழநாட்டு மீது படையெடுத்தான்; வெற்றிபெற்றான். குலோத்துங்கன் இதன்பின்பு விரைவில் இறந்தபோதிலும், அதற்கு முன்பே பற்பல கோவில்களைக் கட்டிச் சென்றான். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலும், திருப்புவனம் கோவிலும் இவனால் கட்டப்பட்டனவே. இவன்காலத்தில் தான் நன்னூல் எழுதிய பவணந்தியும் வாழ்ந்தார். பிற்காலச் சோழ மன்னர்