பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலப் பாண்டியர் வரலாறு

133


மதுரையைக் கைப்பற்றினான். இராமேசுவரத்தில் ஒரு மசூதியைக் கட்டினான். மதுரையைத் தனது பேரரசின் ஒரு பகுதியாக்கப் போவதாகத் தெரிவித்தான். குசுருகான் என்ற மற்றொரு டெல்லி முசுலீம் தளபதி கி. பி. 1318- இல் மதுரையைத் தவிடு பொடியாக்கினான். பாண்டியராட்சி அடியற்ற மரமாயிற்று. இந்தச் சமயம் பார்த்துத் திருவாங்கூரை ஆண்ட இரவிவர்ம குலசேகரன் பாண்டிய நாட்டு மீது படையெடுத்துச் சென்று நெல்லூர் வரையுள்ள பகுதிகளை வென்றான். உள் நாட்டுக் குழப்பம், மாலிக்காபூர், குசுருகான் ஆகியோரது படையெடுப்புக்கள், இவற்றுடன் இரவிவர்ம குலசேகரனின் படையெடுப்பும் ஒருங்கு சேர்ந்து பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. ஒரு முசுலீம் அரசு மதுரையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் நிலைபெற்றிருக்க முடியவில்லை . கி. பி. 1378-இல் விசய நகர மன்னர்கள் பாண்டிய நாடு முழுவதையும் வென்று தங்களோடு சேர்த்துக்கொண்டனர். மதுரையைப் பிடிக்க முடியாவிட்டாலும், பாண்டியர்கள் திருநெல்வேலியிலிருந்து கொண்டே 1800 வரை ஆட்சி செய்துவந்தார்கள்.

பாண்டியர் காலத் தமிழகம்

பாண்டியர் ஆட்சி முறை சோழர் ஆட்சி முறையைப் போன்றதே. கிராமச் சபைகளிடமே கிராம ஆட்சி இருந்தது. பெரும் பெரும் அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. தமிழ் நாட்டுக்கோவில், பண்பாட்டின் உறைவிடமாகவும், மடங்கள் கல்விக் கழகங்களாகவும் திகழ்ந்தன. சைவ வைணவ சமயங்களோடு சமணமும் பௌத்தமும் வளர்ந்தன. அரபு நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடையே சிறந்த வாணிகம் நடந்தது. அரேபியர்கள் பாண்டிய நாட்டில் காயல் பட்டினத்தில் குடியேறினர். பாண்டிய நாட்டுக் கடற்கரை அவர்களால் மலபார் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சொல்லே பின்பு