பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

143


மும் நாயக்கர் கட்டியவையாகும். மதுரையில் மட்டுமல்ல; நெல்லை, இராமநாதபுரம், கோவை, சேலம், திருச்சி முதலிய ஏனைய மாவட்டங்களிலும் நாயக்கரால் நிறுவப்பட்ட கோவில்கள் நிறைந்துள்ளன. சீரங்கக் கோயில், பேரூர்க் கோயில் எல்லாம் நாயக்கர் காலத்தில்தான் எழுந்தன. அவினாசியில் உள்ள கோவிலும் இவர்கள் காலத்தில் தோன்றியதே.

சமயப் பற்றும், கடவுள் பக்தியும், மிகுதியாக உடையவர்களாக நாயக்கர்கள் திகழ்ந்தனர். ஆனால் அவர்கள் சமய வெறி கொண்டு பிற சமயங்களைத் துன்புறுத்தவில்லை. எம்மதமும் சம்மதமே எனக் கொண்டுதான் வாழ்ந்தனர். பிறமதக் கோவில்களுக்கு மானியமும், நன்கொடைகளும் இவர்களால் தாராளமாக வழங்கப்பட்டன. அரசி மங்கம்மாளால் அமைக்கப்பட்ட பெருவழிகளும், வெட்டப்பட்ட குளங்களும், கால்வாய்களும், கட்டப்பட்ட சத்திரம் சாவடிகளும், இன்றும் நாயக்கர்தம் ஆட்சிச் சிறப்பை நன்கு அறிவிக்கின்றன.

செஞ்சி, வேலூர், தஞ்சை நாயக்கர்கள்

மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடத்தியது போலவே செஞ்சி, தஞ்சை, வேலூர் இவ்விடங்களிலும் நாயக்கர்கள் தங்கள் ஆட்சியை நிறுவி பெயர்பெற்றவர்களாயிருந்தார்கள். செஞ்சியை ஆண்ட நாயக்கர்களில் ஒருவனான கோப்பண்ணா என்பவன் தில்லையில் கோவிந்தராசர் சிலையை நிறுவினான். கி. பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே செஞ்சியை ஆண்டுவந்த நாயக்கர்களை கி. பி. 1648-ஆம் ஆண்டு பீசப்பூர் சுல்தான் தோற்கடித்து செஞ்சியைக் கைப்பற்றினான். செஞ்சியை ஆண்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கனும் ஒருவன் ஆவான். இவன் காலத்தில் செஞ்சிக்கு வந்த போர்ச்சுக்கீசியப் பாதிரியார் பிமென்டா