பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தமிழ்நாடும் மொழியும்


வீரன் ஆவான். பல போர்கள் நடத்தி வெற்றியும் பெற்றான். எனினும் கி. பி. 1760-இல் வந்தவாசியில் நடந்த இறுதிப் போரில் மாவீரன் சர். அயர்கூட் என்ற ஆங்கிலத் தளபதி யால் பிரெஞ்சுக்காரர் அடியோடு முறியடிக்கப்பட்டனர். எனவே ஆங்கிலேயர் கை உயர்ந்தது. ஆனால் அவர்கள் தம் ஆட்சியை நம் நாட்டில் நிலை நிறுத்துவதற்குத் தடையாக ஐதர் அலியும், திப்புவும் விளங்கினார்கள்.

கி. பி. 1772-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே ஆங்கிலேய ஆட்சி தொடங்கப்பெற்றது. இதன் காரணமாய் நம் தாயகமாகிய தமிழ் நாட்டின் வரலாறு இந்திய வரலாற்றோடு இணைந்தது. இக்காலத்தில் தான் முதல் கவர்னர் செனரலாக வாரன் ஏச்டிங்சு பதவியேற்றான். ஆங்கிலேயருக்குச் சொந்தமான நிலப்பகுதி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டத் தலைமை அலுவலராகக் கலெக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்களது பணியை மேற்பார்வையிட ரெவின்யூ போர்டு என்ற குழு கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு வரிப் பணத்தைப் பெற்றுப் பாதுகாப்பதற்குக் கால்சா என்ற ஒரு கசானா நிறுவப்பட்டது. இதற்குத் தலைவராக ஒரு தலைமைக் கணக்கர் (Accountant General) பணியாற்றினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில், கிரிமினல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இந்துச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன; மொழிபெயர்க்கப்பட்டன. கல்கத்தாவில் பாங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. திருடர்கள் ஒழிக்கப்பட்டனர். இதன் காரணமாய் வாணிபம் வளர லாயிற்று; வளமும் தருவதாயிற்று.

கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் பெரும் பகுதி ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. திப்புவின் தோல்வியின் காரணமாய் சேலம், கோயம்புத்தூர், தாராபுரம், பாலக்காடு, தஞ்சை முதலிய இடங்கள் ஆங்கிலேய