பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தமிழ்நாடும் மொழியும்


"வீர சுதந்தரம் வேண்டி நின் றார்பின்னை
வேறொன்று கொள்வாரோ"

என்று இவர் எழுப்பிய வினா வீதிதோறும் கேட்டது. மக்கள் வீறுகொண்டெழுந்தனர். வ. உ. சி. அவர்களது சிறந்த நண்பர்களாகிய சுப்பிரமணிய சிவா, வாஞ்சி ஐயர், பரலி சண்முகசுந்தரம் போன்றோர் நம் நாட்டு விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டனர். இவர்களையடுத்து தமிழ்ப்பெரியார் திரு. வி. க. அவர்களும், சொல்லின் செல்வர் திரு. எஸ். சத்தியமூர்த்தி அவர்களும் தங்களின் பேச்சாற்றலினால் மக்களை விழிப்படையச் செய்தனர்.

நம் நாட்டின் அரசியல் வாழ்வும், பேரவை வாழ்வும் வளம் பெறுவதற்குக் காரணமாக இருந்த பெரியார் அண்ணல் காந்தியடிகள் ஆவார். கி. பி. 1918-லிருந்து 1947 வரை அடிகள் நடத்திய அறப்போரே கி.பி.1947-ஆம் ஆண்டு, ஆகச்டுத் திங்கள் 15-ஆம் நாள் நம் நாட்டிற்கு விடுதலையை வாங்கித் தந்தது. திலகர் காலமான பின்னர் காந்தியடிகளே நம் தலைவராகி ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து அறப்போர்கள் பல நடத்தி இறுதியில் வெற்றி பெற்றார். இப்போரில் அடிகள் வெற்றியடைவதற்குப் பெருந் துணைபுரிந்தவர்கள் நேரு, சுபாஸ் போஸ், சி. ஆர். தாஸ், திரு. வி. க., சத்தியமூர்த்தி, ராஜாஜி, திருப்பூர்க் குமரன், சீனிவாச அய்யங்கார் முதலியோராவர்.

இன்று நம் நாடு ஒரு குடியரசு நாடாகத் திகழ்கிறது. சுருங்கக் கூறின் இன்று நம் நாட்டில் மக்களாட்சி நடைபெறுகின்றது. இதன் காரணமாய் 'எல்லோரும் இந் நாட்டு மன்னர்' களாய் விளங்குகின்றோம். மக்களின் உரிமை ஆர்வம், வாழ்க்கை ஆர்வம், ஆள்பவரின் கடமையார்வம் என்ற மூன்றுமே குடியாட்சியின் உயிர் மூச்சுக்களாகும். குடியாட்சி என்பது மக்கள் உள்ளத்திலிருந்து மலரவேண்